துலாம் ராசி மகரம் லக்கினம் குணங்கள் / Thulam Rasi Maharam Lagnam

லக்கினம் மகரம்
மகர ராசியில் உதித்திருப்பதால் நீங்கள் கிடைத்ததைக் கொண்டு நிறைவு காணும் மனப்பக்குவம் உள்ளவர். மெலிந்த நெடிய சரீரத் தோற்றமுடையவர். தக்க சமயத்தில் பிறரை ஏமாற்றத் தயங்க மாட்டீர்கள். இரக்கமும், கல்நெஞ்சமும் ஒருங்கே அமைந்தவர் எனக் கூறலாம். பிறருக்கு உதவ முன் வருவீர்கள். பூ பழங்கள் முதலிய விவசாயத்திலும், தண்ணீர் சம்பந்தப்பட்ட துறைகளிலும் லாயம் கிடைக்கும். விருந்தோம்பலில் சிறந்தவர். சிறந்த மக்கள் செல்வங்களினால் பொருள் திரட்டி ஆனந்தம் அடைவீர்கள். செல்வாக்கும் பெருகியிருக்கும். பெண்களினால் நன்மை உண்டாகும். ஆடுமாடுகளைப் போற்றி வளர்ப்பவர். வரவேற்பு, மரியாதை போன்ற இன்பநிலைகளை அனுபவிப்பீர்கள். ரிஷபராசி 5-ஆம் அரிய அமைந்திருப்பதால் மனங்கவரும் நன்னெறிகளில் மனம் ஊன்றி, பெண் குழந்தைகளைப் பெற்று இன்புறுவீர்கள்.
8-ஆம் இடம் சிம்மராசியாக அமைந்திருப்பதால் வனவிலங்குகள். விஷப்பூச்சிகள் அண்டாமல் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். கவனக் குறைவால் பொருள் களவு போகும் சூழ்நிலைகள் உருவாகலாம். கடவுள்பக்தி குறைவாகக் காணப்படும். எதிராளியின் மனமறிந்து பேசுவதால், கட்சி மாறுவதாகப் பலரும் சந்தேகிக் கும்படி நடந்து கொள்வீர்கள். சூழ்ச்சியாலும், இனிமையாகப் பேசும் தன்மையாலும் எல்லோரையும் தன் வசப்படுத்தும் தன்மை காணப்படும். கேளிக்கைப் பிரியர். 12ம் வீடு தனுசு ராசியாக அமையப் பெற்றிருப்பதால் நண்பர்களையும், பங்காளிகளையும் தேர்ந்தெடுக்கும் பொழுது கவனம் தேவை இல்லாவிடில் வஞ்சனைக்கும், ஏமாற்றத்திற்கும் ஆளாக வேண்டி வரும், அரசாங்க விரோதமும். மேலதிகாரிகளின் தொல்லையும் உருவாகும்.
தங்களுடைய லக்னமானது, அதன் இடத்தின் முதலாவது திரேக்காணத்தில் அமைந்துள்ளதால், யூக அடிப்படையிலான வியாபாரங்களில் தாங்கள் வெற்றி பெறுவீர்கள். தங்களின் பெரும் செல்வமானது, தங்களது தனிப்பட்ட திறமையின் காரணமாக அமையும். தங்களிடத்தில் பல பெரிய திட்டங்கள் இருக்கும். ஆனால் அவையெல்லாம் நடைமுறையில் சாத்தியமானவையாகவும். வெற்றி பெறத் தக்க விதத்திலும் இருக்க வேண்டும் என்பதில்லை. அதிகப்படியான முன் ஜாக்கிரதையோடு இருங்கள். சரியான கட்டுப்பாடில்லாமல் எல்லோரையும் நம்பாதீர்கள். வியாபாரங்களில் தாங்கள் வெற்றி பெறுவீர்கள். பொதுமக்களோடு தொடர்பு கொள்ளத்தக்க விதமான திட்டங்களையும், தொழில்களையும் முயற்சிக்க வேண்டும். சுரங்கத் தொழில், விலையுயர்ந்த ஆபரணக் கற்கள், படிகங்கள் இவை தவிர பெரிய தொழிற்சாலைகள் சம்பந்தமானவற்றில் முதலீடு செய்வது. தங்களுக்குச் சாதகமாக அமையும். தங்கள் வாழ்வில் 20.21.30.31.40.45.50 ஆகியவை மிக முக்கியமான ஆண்டுகள் ஆகும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top