தெலுங்கு வருட பிறப்பு அன்று முருகர் வழிபாடு மிகவும் சிறப்பானது கண்டிப்பாக ஒவ்வொருவரும் முருகப்பெருமானை மனதார நினைத்து அன்று முருகப் பெருமானுக்காக நெய்வ தீபம் ஏற்றினால் சகல நன்மைகளும் உங்கள் குடும்பத்திற்கு கிடைக்கும் என்பது ஐதீகம்.
தெலுங்கு வருடப்பிறப்பு தெலுங்கர்கள் மட்டுமல்லாமல் தமிழர்களும் சேர்ந்து கொண்டாட கூடிய ஒரு விழாவாக பார்க்கப்படுகிறது இன்றைய காலகட்டத்தில் இந்த தெலுங்கு வருடப்பிறப்பு அன்று முருகப் பெருமானை வணங்கினால் சகல நன்மைகளும் உங்களுக்கு கிடைக்கும்.
★ திருமணம் ஆகாதவர்கள் திருமணம் தடை ஏற்பட்டு கொண்டிருக்கக் கூடியவர்கள் முருகப்பெருமானை தெலுங்கு வருட பிறப்பன்று மனதார நினைத்து அவருக்கு நெய் தீபம் ஏற்றி வேண்டிக் கொண்டால் கண்டிப்பாக உங்களுக்கு குடும்ப உறவு அமைய திருமணம் எளிதில் நடக்க உறுதுணையாக முருகப்பெருமான் இருப்பார்.
★ வீடு கட்ட வேண்டும் என்று ஆசை படக்கூடியவர்கள் வீடு கட்ட பணம் இருந்தும் தடைப்பட்டு கொண்டிருக்க கூடிய அத்தனை பேரும் முருகப்பெருமானை நினைத்து உங்கள் இடத்திலிருந்து ஒரு கைப்பிடி மண்ணை எடுத்துக்கொண்டு ஒரு மஞ்சள் துணியில் போட்டு கட்டி பக்கத்தில் இருக்கக்கூடிய முருகப்பெருமானை மூன்று முறை சுற்றி வந்து அவர் சன்னதியில் வைத்து வேண்டிக் கொண்டால் கூடிய விரைவில் உங்களுக்கு வீடு கட்டும் யோகம் அமையும்.
★ எந்த ஒரு சுப காரியம் தொடங்க வேண்டும் என்று நீங்கள் நினைத்திருந்தாலும் தெலுங்கு வருடப்பிறப்ப என்று அதை நீங்கள் தொடங்கலாம்.