சிம்மம் ராசி / மகம் நட்சத்திரம் / கடகம் லக்கினம் / மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணங்கள் மற்றும் பண்புகள் எப்படி இருக்கும்

பிறந்த நட்சத்திரம்: மகம்
உங்கள் ஜென்ம நட்சத்திரம் மகம். ஆகையால் தங்களுக்கு ஞானம், செல்வம், அழகு ஆகிய பண்புகள் இயற்கையிலேயே கிடைக்கும். எனவே தங்களைச் சுற்றி உள்ள மக்களால் தாங்கள் உயர்வாக மதிக்கப்படுவீர்கள். ஆனால் உங்கள் எதிரிகள் உங்களைப் பார்த்து பொறாமைப்படுவார்கள். உங்கள் பெற்றோர்களுக்கு எப்போதும் மரியாதை செலுத்துவீர்கள். எளிமையான வாழ்க்கை உயர்ந்த எண்ணம் எனும் உண்மைகள் உங்களுக்கு மிகவும் பொருத்தமானவை வாழ்க்கையில் உயர்ந்த நிலையில் உள்ளவர்களின் நன்னம்பிக்கையை வெகு எளிதில் பெறுவீர்கள், பழமையான வழக்கத்திலுள்ள நடைமுறைகளைத் தாங்கள் விரும்புவீர்கள், தங்களிடமிருந்து நன்மைகள் பெறுவதற்காகப் பிறர் உங்களைப் புகழ்வார்கள். அவர்களைப் பற்றி ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். தகுதியானவர்களுக்குத் தாங்கள் எப்போதும் உதவியாக இருப்பீர்கள்.
நேர்மை தான் உங்கள் கொள்கை. நேர்மையான, உண்மையான எண்ணங்களையே தாங்கள் கொள்கையாகக் கொண்டிருப்பதால், அதற்கு மாறான பண்புள்ளவர்களைக் கண்டு. தாங்கள் எரிச்சல் அடைவீர்கள். யாருக்கும் தாங்கள் விட்டுக்கொடுக்க மாட்டீர்கள். பலருக்கும் தாங்கள் முன்மாதிரியாக இருப்பீர்கள், உங்களுடைய சுதந்திரமான சிந்தனை. நடுநிலைமை தவறாமை. மனதில் உறுதி ஆகிய நற்பண்புகள் எல்லாவற்றின் சேர்க்கையும், பலர் தங்களிடம் அதிருப்தி கொள்ளக் காரணமாக உள்ளன. உங்களைப் போன்று உயர்ந்த கொள்கை கொண்டில்லாத மற்ற சாதாரணமானவர்களிடத்தில் எப்போதும் விட்டுக்கொடுத்துச் செல்லும் பண்புள்ளவராக இருக்குமாறு தங்களுக்கு ஆலோசனை கூறப்படுகிறது. என்றாலும். அத்தகையவர்களுடனும் கூடத்தான் தாங்கள் வாழவேண்டியுள்ளது.
மக நட்சத்திரத்தின் மிருகம், விருக்ஷம், கணம், யோனி போன்றவை பின்வருமாறு மிருகம் எலி. விருக்ஷம் * ஆல். கணம் – ராக்ஷச யோனி ஆண் பக்ஷி ஆண் கழுகு, பூதம் தேவதை * பிரம்மா, நாமம் – ம.மி.மு.மெ சௌபாக்கியங்களும் நிறைவுற பெறுவீர்கள்.
அப்பு. மக நட்சத்திரத்தில் பிறந்துள்ள நீங்கள் சாஸ்திர விதிகளின்படி மேலே குறிப்பிட்டுள்ள உங்கள் பக்ஷி மிருகங்களுக்கு துன்பம் விளைவிக்காமலும், கவனமாக பாதுகாத்தும் வந்தால் நீண்ட ஆயுளும், சகல
திதி : ஷஷ்டி
சஷ்டி திதியில் பிறந்த நீங்கள் தன்னடக்கமற்ற, மனதைக் கட்டுப்படுத்த முடியாத மனநிலையிலும் இருப்பீர்கள். பிறர் உங்களுடன் மனம் திறந்து பழக மறுப்பதாக நினைப்பீர்கள். உடல் நிலையும். பொருளாதாரமும் நல்ல நிலையில் தொடரும்.
நித்திய யோகம் : வஜ்ர
வஜ்ரயோகத்தில் பிறந்த நீங்கள் எக்காரியத்திலும் கவனமுடனும், கூர்மையாகவும் செயல்படுவீர்கள். இளமைப் பருவத்தில் பல சச்சரவுகளிலும் ஈடுபடுவது இயல்பாகும். பிறரிடம் குறை காணும் பழக்கம் உண்டாகும். உயர்ந்த பதவிகளை அடையும் தகுதி நிறைந்தவர். மற்றவர்களின் மேன்மைகளைப்பாராட்டும் தன்மையை உருவாக்கிக் கொள்வது நலன்பயக்கும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top