வேதைப் பொருத்தம்
கீழ்க்கண்ட பெண் நட்சத்திரங்கள் அவைகளுக்கெதிரில் குறிக்கப்பட்ட நட்சத்திரங்களில் ஆண் நட்சத்திரமாக அமையின் தோஷங்களாம் அதாவது வேதையாம்.
இப்படி பெண் நட்சத்திரங்கள் அமைந்து ஆண் நட்சத்திரங்களும் அமையின் வேதையாம்; இவை தள்ளிவிடவேண்டியது. இங்கு வேதை என்றும் கூறப்பட்ட
நட்சத்திரங்கள் ஆண்களுக்கு பெண்களுக்கும் தோஷங்களாக அமைவதையும் காணலாம். ஆகவே இந்த விதத்திலும் இவை தோஷப் பரங்களாகின்றன.
இந்த வேதைப் பொருத்தமும், ரஜ்ஜுப் பொருத்தமும் வானகணித சாஸ்திரத்தில் வியதிபாதம் என்றும், வைதருதி என்றும் கூறப்படும். அவைகளுடன் ஒருவிதத்தில் சம்மந்தப்பட்டவை. சூரியனும் சந்திரனும் ஒரே கிராந்தியும் அல்லது பேரவல்லும் ஆக இருந்து வெவ்வேறு ராசிகளில் நின்றால் வியதிபாதம் என்றும் ஒரே ராசியில் இப்படியிருதால் வைத்ருதி என்றும் கூறப்படும். 60,120,180,240 என்ற பாகைகளில் இருந்தாலும் சிற்சில குணாதோஷங்கள் பல்வேறு சாஸ்திரங்களிலும் கூறப்படுகின்றது. அவற்றில் நமது சாஸ்திரங்களில் இத்தகைய வித தோஷங்கள் சம்பவிக்கும் போது விசேஷமான அக்கினியும், உஷ்ணமும் ஏற்படும் என்றும் அதனாலே விபத்து என்றும் கூறப்படுகின்றது. ஆகையால் தான் மற்ற எல்லா பொருத்தங்கள் இருந்தாலும் ரஜ்ஜு பொருத்தம் இல்லாவிடில் இந்த ஜாதக விவகாரத்தை தள்ளிவிட வேண்டியது என்றும் உறுதியாக கூறப்படுகின்றது.