பிறந்த குழந்தையின் ஜாதகத்தை எப்படி தயார் செய்வது என்பது பற்றி தெரிந்து கொள்வோம் முதலில் ஒரு குழந்தை இந்த உலகில் பிறக்கப் போகிறது என்றால் கண்டிப்பாக அந்தக் குழந்தையை நாம் சந்தோஷமாக வரவேற்க வேண்டும் பிறகு தான் ஜாதகம் ஜோதிடம் சாஸ்திரம் அத்தனையும் அதனால் முதலில் உங்கள் குழந்தை பிறந்த சந்தோஷத்தை முழுமையாக அனுபவியுங்கள்.
பிறகு உங்கள் குழந்தை இந்த உலகிற்கு வரும் நேரத்தை அங்கு இருக்கக்கூடிய பிரசவம் பார்த்த செவிலியர்களிடம் சொல்லி துல்லியமான நேரத்தை எனக்கு கணித்துக் கொடுங்கள் என்று சொல்லி அவர்களை உதவிக்கு கேட்கலாம் அவர்களும் உங்கள் குழந்தை பிறந்த நேரத்தை தெளிவாக துல்லியமாக உங்களுக்கு தருவார்கள் அந்த நேரத்தை அடிப்படையாகக் கொண்டுதான் உங்கள் குழந்தையின் ஜாதகம் கணிக்கப்படும்.
ஒரு செவிலியர் உங்கள் குழந்தை பிறந்த நேரத்தை சரியாக சொல்கிறார் அந்த நேரத்தை நீங்கள் முதலில் எடுத்துக் கொள்ளுங்கள் பிறகு எந்த ஊரில் உங்கள் குழந்தை பிறந்தது என்பது முக்கியம் மற்றும் உங்கள் குழந்தை எந்த தேதியில் பிறந்தது என்பது முக்கியம் இந்த மூன்று விஷயங்கள் மிக மிக முக்கியம் ஒரு பிறந்த குழந்தைக்கு ஜாதகம் கணிப்பதற்கு.
உங்கள் வீட்டுக்கு அருகாமையில் இருக்கக்கூடிய ஒரு ஜோதிடரை அணுகி இந்த மூன்று விஷயங்களையும் சொல்லி நீங்கள் ஜாதகத்தை தயார் செய்ய சொல்லலாம் அல்லது இன்று பலவகையான கணினியில் சாஃப்ட்வேர் உள்ளது அதில் பிறந்த நேரம் பிறந்த தேதி பிறந்த ஊர் இந்த மூன்றையும் சொன்னால் அவர்களே ஜாதகத்தை ஒரு பிரிண்ட் ஆக எடுத்து உங்களிடம் கொடுத்து விடுகிறார்கள் அதையும் நீங்கள் வைத்துக் கொள்ளலாம்.
ஒரு குழந்தை இவ்வாறு மூன்று விஷயங்களை கொண்டு ஒரு ஜாதகம் தயார் செய்து விட்டான் அந்த குழந்தைக்கு என்ன நட்சத்திரம் என்று முதலில் பார்க்க வேண்டும் அந்த நட்சத்திரத்தின் அடிப்படையில் எந்த எழுத்து முதலில் ஆரம்பிக்கிறது என்பதை தெரிந்து கொண்டு அதில் சிறந்த எழுத்து எது என்பதை பார்த்து உங்கள் குழந்தைக்கு அந்த முதல் எழுத்து தொடங்கும் பெயரை வைப்பது சிறப்பு வாய்ந்தது.