பூஜை அறையில் சாமி படங்களோடு இறந்துவிட்ட குடும்பத்தாரின் புகைப்படங்களை வைத்து வழிபாடு செய்யலாமா.? இது நமக்கு நன்மைகளை கொடுக்குமா.?
எப்போதும் பூஜை அறையில் இறைவன் குடியிருக்க கூடிய இடமாக பார்க்கப்படுகிறது ஒரு வீடு என்று எடுத்துக் கொண்டால் நிச்சயமாக அந்த வீட்டுக்குள் பூஜை அறை இருந்தாக வேண்டும் இதுதான் இந்து தர்மம் இந்து வேதாந்தம் இந்து சித்தம் என்று சொல்லப்படுகின்றன ஒரு ஊருக்கு கோவில் எப்படி முக்கியமோ அது போல ஒரு வீட்டுக்கு பூஜை அறை மிக மிக முக்கியம் இதற்கு பின்னால் அறிவியல் பூர்வமாக பல விஷயங்கள் இருந்தாலும் ஒரு குடும்பத்தில் பூஜையறை இருந்தால் அந்த வீடு செவ்வாய்க்கிழமை ஆனால் சுத்தம் செய்யப்படும் வெள்ளிக்கிழமை ஆனால் சுத்தம் செய்யப்படும் நல்ல நல்ல நாட்களில் வீடுகள் சுத்தம் செய்யப்படும் இதனால் வீடுகள் பாதுகாப்பாக இருக்கும் அங்கு வசிக்கக்கூடிய மக்களுக்கு எந்த விதமான உடல் உபாதைகளோ ஏற்படாமல் ஒரு நல்ல மாற்றத்தை கொடுக்கும் இது அறிவியல் பூர்வமான விஷயம் சரி பூஜையறையில் சாமி படங்களோடு இறந்துவிட்ட குடும்பத்தாரின் புகைப்படங்களும் வைத்து வழிபாடு செய்யலாமா வாருங்கள் பார்க்கலாம்.
பூஜை அறையில் சாமி படங்களோடு இறந்து விட்டவர்களினுடைய புகைப்படங்களையும் வைத்து வழிபாடு செய்யலாம் இதில் எந்த ஒரு தவறும் இல்லை ஆனால் சாமி படங்களோடு சேர்த்து இறந்தவர்களுடைய புகைப்படங்களை வைக்கக்கூடாது சாமி படங்கள் கிழக்கு பார்த்தவாறு இருந்தால் நம் முன்னோர்களின் உடைய புகைப்படங்கள் தெற்கு பார்த்த மாதிரி வைக்க வேண்டும். சரி இதில் என்ன செய்ய வேண்டும் என்றால் தூபம், தீபம், சூடம் காட்டலாம் மலர்கள் அணிவிக்கலாம், இதில் எந்த தவறும் இல்லை.
இறந்தவர்கள் புகைப்படத்தை உங்களுக்கு ஒரு வேலை பூஜை அறையில் வைத்து வழிபடுவதற்கு மன சங்கடமாக இருந்தால் நீங்கள் தாராளமாக பூஜை அறைக்கு வெளியில் வாசப்படிக்கு பக்கத்தில் வைத்து தினமும் உள்ளே கடவுளுக்கு பூஜை செய்த பிறகு வெளியில் வரும்போது அந்த இறந்தவர்களுக்கும் நீங்கள் தீபம் சூடம் தூபம் இது எல்லாம் காட்டி வழிபாடு செய்யலாம் இதில் எந்த ஒரு தவறும் இல்லை.