விநாயகரை வணங்கும்போது இந்தியா முழுவதும் அல்ல உலகம் முழுவதும் கண்டிப்பாக தோப்புக்கரணம் போட்டு வழிபாடு செய்வது மிகவும் மிக முக்கியமான நக ஒன்றாக பார்க்கப்படுகிறது அந்த வகையில் விநாயகரை வழிபாடு செய்யும்போது தோப்புக்கரணம் போடும் வழக்கம் எப்படி வந்தது என்பது பற்றி பல பேருக்கு தெரியாமல் இருக்கும் இந்த பதிவில் அதை தான் பார்க்க போகின்றோம். விநாயகரை வழிபாடு செய்யும்போது தோப்புக்கரணம் முதல் முதலில் யார் ஆரம்பித்து வைத்தார்கள் என்பதை பற்றி சுருக்கமாக தெளிவாக பார்க்கலாம்.
விநாயகரை வணங்கி வழிபடும்போது அனைவரும் முன் நெற்றியில் மூன்று முறை கொட்டிக்கொண்டு மற்றும் இரண்டு கைகளையும் அவரவர் காதுகளைப் பிடித்துக் கொண்டு ஐந்து முறை தோப்புக்கரணம் போட வேண்டும் இதுதான் இன்று வரை அனைத்து கோவில்களிலும் நடந்து கொண்டிருக்கிறது அந்த வகையில் முதலில் தோப்புக்கரணம் யார் போட்டார்கள் என்றால் அகத்திய முனிவர் தனது தவறுக்காக விநாயகர் முன் தோப்புக்கரணம் போட்டதை அடுத்து அந்த பழக்கம் இன்று வரை அனைவரும் பின்பற்றிக் கொண்டிருக்கிறார்கள் தோப்புக்கரணம் போட ஆரம்பித்து வைத்தவர் அகத்திய முனிவர் என்பது குறிப்பிடத்தக்கது.