கோவிலுக்கு போகும்போது பிச்சை போடலாமா :-
கோவிலுக்கு போகும்போது பிச்சை போடலாமா அல்லது தர்மம் செய்யலாமா என்ற ஒரு சந்தேகம் கண்டிப்பாக அனைவருக்கும் இருக்கும் அதைப்பற்றி தான் இந்த பதிவெல்லாம் பார்க்க போகின்றோம்.
எப்போதும் கோவிலுக்கு உள் செல்வதற்கு முன் நீங்கள் யாருக்கு வேண்டுமானாலும் தர்மம் செய்யலாம் தவறில்லை வெளியே இருக்கக்கூடிய அத்தனை பிச்சைக்காரர்களுக்கும் உங்களால் முடிந்த உணவுகளையோ பணத்தையோ நீங்கள் தானம் கொடுக்கலாம்.
ஆனால் கோவிலுக்கு உள் சென்று கடவுளை வணங்கி பூஜை செய்த பிறகு நீங்கள் வெளியே வரும்போது யாருக்கும் தானம் செய்யக்கூடாது அதாவது பிச்சை போடக்கூடாது.
( ஏன் பிச்சை போடக்கூடாது என்று கேள்வி உங்களுக்கு வரும் நன்றாக புரிந்து கொள்ளுங்கள் நீங்கள் கடவுளிடம் சென்று பிச்சை கேட்கின்றீர்கள் எனக்கு வாழ்வு கொடு வருமானம் கொடு வேலை கொடு ஏதோ ஒரு விஷயத்திற்காக கோவிலுக்கு சென்று கடவுளிடம் பிச்சை கேட்கின்றீர்கள் அவரிடம் கேட்டு வாங்கிக் கொண்டு வரக்கூடிய பிச்சையை நீங்கள் வேறு ஒருவருக்கு தானம் செய்து விடுவதாக அர்த்தம் அதனால் எப்போதும் கோவிலுக்கு சென்றால் நீங்கள் வீட்டிற்கு தான் செல்ல வேண்டும் யாருக்கும் தானம் தர்மம் செய்யக்கூடாது)
கோவிலுக்கு உள் செல்வதற்கு முன் நீங்கள் யாருக்கு வேண்டுமானாலும் தானம் தர்மம் பிச்சை எதை வேண்டுமானாலும் கொடுக்கலாம்.