ஆடி மாதம் முருகர் வழிபாடு மிகவும் சிறப்பு வாய்ந்தது அந்த வகையில் முருகரை ஆடி மாதத்தில் வழிபாடு செய்வதால் நமக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
ஆடி மாதம் என்றாலே முருகருக்கு பேர் போன விசேஷமான நாட்கள் ஆடி ஒன்று ஆடி கிருத்திகை மற்றும் ஆடி 18 இப்படி முருகருக்கு என்று விசேஷமான குறிப்பிட்ட நாட்களை நம் முன்னோர்கள் வகுத்துள்ளார்கள் அதன் அடிப்படையில் தான் பல ஆயிரம் ஆண்டுகளாக அபிஷேகம் ஆராதனைகள் நடந்து கொண்டிருக்கின்றன மற்றும் முருகரை வழிபாடு செய்வதால் நமக்கு சகல நன்மைகளும் கிடைக்கின்றன திருமணம் நடக்காதவர்கள் பணம் தட்டுப்பாடு இப்படி பல பிரச்சினைகளை காண தீர்வை முருகர் வழிபாட்டு தீர்த்து வைக்கின்றன இந்த பதிவில் தெளிவாக நாம் பார்க்கலாம் வாருங்கள்.
ஆடி மாதம் முருகர் வழிபாடு செய்வதால் கிடைக்கும் நன்மைகள்
★ ஆடி மாதத்தில் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் முருகருக்கு நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்வதால் திருமண தடைகள் நீங்கி திருமணம் நடக்கும்.
★ ஆடி மாதத்தில் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் மஞ்சள் நிற பூக்களால் முருகருக்கு அலங்காரம் செய்து நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் வீடு கட்டுவதற்கான யோகம் கிடைக்கும்.
★ முருகரை ஆடி மாதத்தில் வழிபாடு செய்வதால் கண்ணுக்குத் தெரியாத தோஷங்கள் விலகும்.
★ முருகர் கோவிலில் ஆடி மாதத்தில் தொட்டில் கட்டி முருகரை வழிபாடு செய்தால் குழந்தை பாக்கியம் உண்டாகும்.




















