ஆடி மாதத்தினுடைய முதல் வெள்ளிக்கிழமை செய்ய வேண்டிய அம்பிகையின் வழிபாடு.
ஆடி மாதம் முழுவதுமே நாம் அம்பிகையை வழிபடுவதற்கு உயர்ந்த மாதமாக இருந்த போதிலும் அம்பிகையினுடைய பல்வேறு ரூபங்களையும் நாம் தனித்தனியாக வழிபடுவதற்கும், கொண்டாடுவதற்கும் ஏற்ற மாதம் அப்படின்னாலே அது ஆடி மாதம் தான், அந்த வகையில் முப்பெரும் தேவியர்களையும், சப்த கன்னிமார்களையும், கிராமத்தின் அதிதேவதைகளையும், நம்முடைய குலதெய்வங்களாக விளங்குகின்ற பெண் தெய்வங்களையும் இப்படி பல தெய்வ வழிபாட்டுக்கு சிறப்பு பெற்றது இந்த ஆடி மாதம்.
அதிலையும் குறிப்பாக முப்பெரும் தேவியர்களை நாம் வழிபடக்கூடியது. நவராத்திரி காலம் அப்படின்னு இருந்தால் கூட ஆடி மாதத்திலும் இந்த முப்பெரும் தேவியரை நாம் வழிபாடு செய்யலாம்.
முதல் தேவியாக நாம் வழிபடக்கூடியவள் துர்க்கை, அந்த துர்கையினுடைய ரூபமாகத்தான் காளி அப்படிங்கிற ஒரு ரூபத்தை நாம் வைத்திருக்கிறோம். மகா துர்கை அப்படியும் நாம சொல்றோம். அது உக்கிரமாக இருக்கிற போது மகா காளி அப்படின்னு நாம சொல்லி வழிபாடு செய்கின்றோம். இந்த அற்புதமான தேவியை நாம் வழிபாடு செய்யக்கூடிய இந்த ஆடி மாதத்தில் தனித்துவமாக அவளை எவ்வாறு வழிபாடு பண்ணனும் அந்த நாள்ல என்னெல்லாம் நைவேத்தியம் பண்ணனும் அப்படிங்கறத தான் இன்னைக்கு உங்களுக்கு நான் சொல்ல போறேன்.
துர்க்கை அப்படின்னு நாம சொன்னாலே நம்முடைய துன்பங்களை அகற்றுபவள் அப்படின்னு அர்த்தம் அப்போ துன்பம் போகணும் அப்படின்னா அந்த துன்பத்தை அழிக்க வல்ல தெய்வியாகவும் அவள் இருக்கனும் இல்லையா அதனாலதான் அவள மகாகாளி என்று சொல்கிறோம்.
இந்த காளிக்கு பலவகையான பெயர்கள் பல வகையான ரூபங்கள் இருந்த போது கூட. காலி என்று சொன்னால் உடனே எல்லாருக்கும் ஞாபகம் வர ஒரு பெயர் இருக்கு, அது என்னன்னா தக்ஷினகாளி அப்படின்னு பெயர். தக்ஷின காலின்னா கல்கட்டா பக்கம் போன வங்காளத்தில் தான் இந்த பெயர் ரொம்ப பிரபலமாக இருக்கிறதே நம்ம ஊருல அப்படி நிறைய பேர் சொல்றதில்லையே என்ன சிலருக்கு யோசனை வரும்.
நம்முடைய பகுதிகளில் கூட தக்ஷினகாளி அப்படின்னு நாம சொல்லி பல இடங்கள்ல பார்க்கலாம், இந்த தக்ஷின காலினை என்ன அர்த்தம் அப்படின்னா தென் திசைக்கு அதிதேவதையாக விளங்க கூடியவள். இந்த காளி தேவி தெற்கு யாருக்கு உரியது எமனுக்கு உரியது, எமனுக்கு உரிய இந்த திசையில் எமனையே வென்று என்னுடைய அடியார்களுக்கு அருகே பாவித்து வருகின்ற இடம். இடர்களை நான் கலைந்து என்னுடைய பக்தர்களை நான் காப்பாற்றுகிறேன். அப்படின்னு காவலாக நின்று மரண பயத்தை போக்குகின்ற பெரும் தேவியாக வழங்கக்கூடியவள்.
அதனால இந்த அம்பிகைக்கு தக்ஷின காளி அப்படிங்கிற ஒரு அற்புதமான பெயர் அமையப்பெற்றிருக்கிறது. இத்தனை சிறப்பு களும் உண்டான காளி அப்படின்னு சொன்னவுடனே நிறைய பேருக்கு காலினாலே ஒரு பயம் இருக்குங்க. எப்படி தாம்மா இந்த காளிய நம்ம கும்பிடுவது அப்படின்னு நினைப்பீங்க, பயப்படாதீங்க. காலில் ஞானத்தினுடைய தேவியும் கூட ஞானம் பெற்ற அடியார்களின் உடைய வரலாறுகளை எல்லாம் நீங்கள் எடுத்த பாருங்கள் அத்தனை பேரும் கண்டிப்பாக காளியின் அருள்பெற்ற அன்பர்களாகத்தான் இருப்பார்கள். ஏன் அப்படினா காளிதேவி ஞானமாதா, ஞானஸ்வரூபிணி வாக்கு வன்மையை தந்து ஞானத்தில் அதி உயர்ந்தவர்களாக செய்யக்கூடிய ஒரு அற்புத நலனை மகா காளியே நமக்கு அருளுகின்றார் ராமகிருஷ்ண பரமஹம்சர் காலியினுடைய பக்தர், மகாகவி காளிதாசர் பெயரிலேயே இருக்கு, நம்முடைய தமிழ்நாட்டில் பிறந்த மகாகவி பாரதியாரும் மஹா காளியை வழிபாடு செய்தவர். காலியினுடைய அருள் பெற்ற அருளாளர்கள் அப்படி ஞானத்தை தரக்கூடிய ஞான தேவதையாகவும் நமக்கு விளங்குகின்ற அந்தக் காளியை நாம இந்த வெள்ளிக்கிழமைகளில் எவ்வாறு வழிபாடு செய்யலாம்.
வெள்ளிக்கிழமை காளியை வழிபாடு செய்யும் முறை
வெள்ளிக்கிழமையில் காலையில் எழுந்து குளித்து முடித்துவிட்டு நல்ல துணியை உடுத்திக் கொண்டு உங்கள் வீட்டிற்கு அருகாமையில் இருக்கக்கூடிய காளி கோவிலுக்கு சென்று தாலியை மனதார வேண்டி அவளை மூன்று முறை சுற்றி வலம் வந்து நினைத்ததை வேண்டிக் கொண்டால் நினைத்த அத்தனை காரியங்களும் கைகூடி ஞாபக சக்தி அதிகரித்து உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றங்களை அடைவீர்கள்.