கோடை காலங்களில் ஈரமான பொருட்கள் சாப்பிட்டு தொண்டை கட்டிக் கொண்டால் சளி பிடித்தால் இரும்பல் ஏற்பட்டால் எளிய முறையில் குணப்படுத்தும் அரிய வகை வீட்டு மருத்துவம்:-
கோடை காலம் என்றாலே நிச்சயமாக ஒவ்வொருவருக்கும் குளிர்பானத்தை குடித்தாலோ அல்லது ஈரமான பொருட்கள் எதையாவது உண்டாலோ உடனடியாக சளி பிடித்து விடும், இரும்பல் வந்துவிடும், காய்ச்சல் ஏற்படும், மிக முக்கியமான விஷயம் தொண்டை கட்டிவிடும் அல்லது தொண்டை வலி ஏற்படும். இப்படி கோடை காலத்தில் தொண்டை கட்டினாள் அல்லது இரும்பல் சளி ஏற்பட்டால் எளிதாக நம் வீட்டு மருத்துவத்தின் மூலமாகவே குணப்படுத்தலாம் அதைப்பற்றி தான் இந்த பதிவில் நாம் பார்க்கப் போகின்றோம். எளிமையான முறையில் நம் உடலை பாதுகாப்பது எப்படி குறிப்பாக நம்முடைய நாட்டு மருத்துவத்தின் மூலமாக.
மூலப் பொருள்:
கோடை காலத்தில் தொண்டை கட்டி சளியும் வாட்டி வதைக்கும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை, அப்படி ஏற்படும்போது நாம் என்ன செய்ய வேண்டும் என்றால் சிறிதளவு சித்திரத்தையும் சிறிதளவு மிளகு எடுத்து நன்கு பொடி செய்து வெந்நீரில் கலந்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும். கொதிக்க வைத்த பிறகு அதை ஒரு டம்ளர் அளவு எடுத்து குடித்தால் சளியில் தீவிரம் குறையும் தொண்டைக் கட்டுதல் விலகும் இரும்பல் இருந்தாலும் குறையும்.
செய்முறை விளக்கம்:
சிறிதளவு சித்திரத்தை எடுத்துக் கொள்ளுங்கள் சிறிதளவு மிளகு இந்த இரண்டையும் நன்கு பொடி செய்து கொள்ள வேண்டும். பொடி செய்ததை வெந்நீரில் போட்டு நன்கு கொதிக்க வைக்க வேண்டும், கொதிக்க வைத்த பிறகு அதை எடுத்துக் குடிக்க வேண்டும். ஒரு வேலை உங்களால் அதைக் குடிக்க முடியவில்லை என்றால் கூடவே பணங்கள் அல்லது நாட்டுச் சர்க்கரை கலந்து குடிக்கலாம் நிச்சயமாக இயற்கையான முறையில் இருமலையும் சளியும் காய்ச்சலையும் தொண்டைக் கட்டுதலையும் குணப்படுத்தும், அருமருந்தாக இது விளங்குகிறது. முடிந்தவரை வாரத்திற்கு இரண்டு முறை குடியுங்கள் உங்களுக்கு சளி பிடிக்காது தொண்டை கட்டாது இரும்பல் ஏற்படாது.
குறிப்பு:
இதை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை யார் வேண்டுமானாலும் குடிக்கலாம். எத்தனை பேர் குடிக்கின்றீர்களோ அந்த அளவுக்கு சித்திரத்தையும் மிளகையும் சேர்த்துக் கொள்ளுங்கள் சில பேருக்கு அதிக மிளகு சேர்த்துக் கொண்டால் வயிறு வலி ஏற்படும் அதனால் உங்களுக்கு உங்கள் உடலுக்கு தேவையான அளவு நீங்கள் எடுத்துக் கொண்டால் போதுமானது. முக்கியமான விஷயம் இதை இயற்கையான முறையில் எடுத்து பொடி செய்து பானமாக குடிக்க வேண்டுமே தவிர நாட்டு மருந்து கடைகளில் வைக்கக்கூடிய பவுடர்களை வாங்கி கலந்து குடித்தால் உங்களுக்கு நன்மைகள் குறைவாக கிடைக்கும். குறிப்பாக இதில் கெமிக்கல்கள் கலக்கப்பட்டு இருக்கும். அதனால் உடலுக்கும் சிறிதளவு தீங்கு ஏற்படலாம் அதனால் முடிந்தவரை இயற்கையான முறையில் எடுத்து பயன்படுத்துங்கள் நல்ல ஆரோக்கியமான உடல் அமைப்பை பெற்று மகிழ்ச்சியாக இருங்கள்.