நன்கு பசி எடுக்க என்ன செய்ய வேண்டும்
இன்றைய காலகட்டத்தில் நாம் அதிக அளவு வேலைகளை செய்து கொண்டிருப்பதால் பசி என்ற உணர்வு நமக்கு சரியான நேரத்தில் எடுப்பது குறைவாக இருக்கும். இதற்கு காரணம் மன அழுத்தம் இருக்கக்கூடியதாக இருக்கலாம் அல்லது ஏதோ ஒரு டென்ஷன் என்று சொல்லக்கூடிய பிரச்சனை நம்மை சேர்ந்து சார்ந்திருக்கலாம் அல்லது ஏதோ ஒரு உடல் உபாதைகளால் பசித்தன்மை நமக்கு உண்டாகாமல் இருந்திருக்கும் அந்த வகையில் இந்த பதிவில் நன்கு பசி எடுக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி எளிமையான பாட்டி வைத்திய முறையை தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
பசி உண்டாக என்ன செய்யவேண்டும் :-
உங்களுக்கு பசி எடுக்க சீரகத்தை பொன் வறுவலாக வறுத்து அதை நன்கு பொடி செய்து அதை சூரணமாக சிறிது அல்லது தேவைப்படும் அளவுக்கு பனை வெல்லத்துடன் சேர்த்து தினமும் சாப்பிட்டு வந்தால் பசி உண்டாகும்.