உஷ்ணத்தால் ஏற்படுகின்ற உடல் உபாதைகளை எப்படி விரட்டுவது / எளிய வீட்டு மருத்துவம்

உஷ்ணத்தால் ஏற்படுகின்ற உடல் உபாதைகளை எப்படி விரட்டுவது / எளிய வீட்டு மருத்துவம்:-

வெயில் காலங்களில் உடல் அதிக அளவு உஷ்ணம் ஆகிவிடும் இந்த உஷ்ணத்தால் நமக்கு ஏற்படுகின்ற வியாதிகள் எதுவாக இருந்தாலும் வராமல் இருப்பதற்கு நாம் சில விஷயங்களை செய்ய வேண்டும், அதைப்பற்றி தான் இந்த பதிவில் நாம் தெளிவாக பார்க்க போகின்றோம். மாதத்திற்கு இரண்டு முறை குடித்தால் போதுமானது உஷ்ணத்தால் ஏற்படுகின்ற எந்த ஒரு வியாதியாக இருந்தாலும் உங்கள் அருகில் வராது.

மூலப் பொருள்:

ஒரு டம்ளர் சுத்தமான பசும்பாலுடன் ஒரு ஸ்பூன் பனை வெல்லம் அல்லது நாட்டு வெல்லம் நன்றாக கலக்க வேண்டும். கலக்கிய பாலுடன் ஒரு ஸ்பூன் கசகசா பொடியை சேர்த்து குடித்தான் சூட்டினால் ஏற்படுகின்ற வயிறு வலி பறந்து விடும் இதை மாதம் இருமுறை குடித்து வந்தால் உஷ்ணத்தால் ஏற்படுகின்ற எந்த ஒரு வியாதியும் உங்க கிட்டே வராது.

செய்முறை விளக்கம்:

ஒரு டம்ளர் அளவு சுத்தமான நாட்டு பசும்பால் எடுத்துக் கொள்ள வேண்டும் அதில் ஒரு ஸ்பூன் பனை வெல்லம் உடலுக்கு மிகவும் ஆரோக்கியம் தரக்கூடியது அப்படி பணம் வெல்லம் கிடைக்காதவர்கள் நாட்டு வெல்லம். அந்த ஒரு டம்ளர் பாலில் போட்டு நன்கு கலக்க வேண்டும் ஒரு ஸ்பூன் கசகசா பொடியை சேர்த்து நன்கு கலக்க வேண்டும் அதை மாதத்திற்கு இரண்டு முறை குடித்தாலே போதுமானது உடல் சூட்டினால் ஏற்படுகின்ற வயிற்று வலி பறந்து விடும் உஷ்ணத்தால் வேறுபடுகின்ற எந்த வகையான வியாதியாக இருந்தாலும் உங்கள் உடலுக்கு அண்டாது.

இது நம்முடைய வீட்டிலேயே இருக்கக்கூடிய பொருட்கள் அதிக அளவு செலவு கூட செய்ய வேண்டிய அவசியம் இல்லை. சுத்தமான பால் நாட்டு வெள்ளம் கசகசா மூன்றே மூன்று எல்லோர் வீடுகளிலும் இருக்கக்கூடியது தான் இதை வைத்தே உஷ்ணத்தால் ஏற்படுகின்ற எந்த ஒரு வியாதியும் உங்களிடம் அண்டாமல் உங்களால் பாதுகாக்க முடியும்.

குறிப்பு:

முடிந்தவரை சுத்தமான பசும்பாலை பயன்படுத்துங்கள் பாக்கெட் பால்களை பயன்படுத்த வேண்டாம் ஏனென்றால் நாட்டு மருத்துவத்தை பொருத்தவரை மூலப்பொருளாக பசும்பால் விளங்குகிறது. எல்லா நாட்டு மருந்துகளையும் கலக்குவதற்கு பசும்பால் உதவுகிறது அதனால் முடிந்த வரை நாட்டு பசும்பாலை பயன்படுத்துங்கள் முடியாத பட்சத்தில் பாக்கெட் பாலை எடுத்துக் கொள்ளுங்கள். சர்க்கரையை கலக்க வேண்டாம் முடிந்தவரை நாட்டு வெல்லம் அல்லது பணவெல்லத்தை கலந்து அருந்துங்கள் உங்கள் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top