ஞாபக சக்தியை அதிகப்படுத்த நரம்பு தளர்ச்சி நீங்க இதயம் வலுபெற உடம்பில் தாது சத்து அதிகமாக வல்லாரைக் கீரை நமக்கு பயன் உள்ளதாக அமைகிறது / How to increase memory power | Vallarai keerai Benefits in tamil

ஞாபக சக்தியை அதிகப்படுத்த நரம்பு தளர்ச்சி நீங்க இதயம் வலுபெற உடம்பில் தாது சத்து அதிகமாக வல்லாரைக் கீரை நமக்கு பயன் உள்ளதாக அமைகிறது / How to increase memory power | Vallarai keerai Benefits in tamil | Vallarai juice benefits

கொரோனா காலகட்டத்தில் பல பேருக்கு ஞாபக சக்திகள் இழந்துவிட்ட தருணம் உண்டு அப்படி ஞாபக சக்தி இழந்தவர்கள் பொதுவாகவே எனக்கு ஞாபக சக்தி குறைவுதான் என்று சொல்லக்கூடியவர்கள் நிச்சயமாக வல்லாரைக் கீரையை உண்பதனால் நமக்கு பல வகைகளில் அது பயன்களை தருகிறது. அது மட்டுமல்லாமல் நம்முடைய ஞாபக சக்திகளை பல மடங்கு அது அதிகரிக்க செய்கிறது. நரம்பு தளர்ச்சியிலிருந்து நம்மை விடுபடச் செய்கிறது, இதயத்திற்கும் இதய ரத்த ஓட்டத்திற்கும் அது வலுப்பெறச் செய்கிறது. அது மட்டுமல்லாமல் நம் உடம்பில் தாது சத்துக்களை அது அதிகப்படுத்த உதவுகிறது. ஆம் இன்று நாம் இந்த பதிவில் வல்லாரைக் கீரை பற்றிய நன்மைகளை தான் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இதை நீங்கள் சாப்பிடுவதன் மூலமாக உங்களுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை பற்றி பார்க்க போகின்றோம்.

மூலப் பொருள்:

வல்லாரை இலைச்சாறு மற்றும் வல்லாரை கீரை

இந்த வல்லாரை கீரை நமக்கு என்னென்ன நன்மைகளை தருகிறது என்றால். முதலில் நினைவாற்றலை அதிகப்படுத்துகிறது. நினைவாற்றலை அதிகப்படுத்தக்கூடிய நாட்டு மருத்துவங்களில் முதலிடத்தில் இந்த வல்லாரை இலை சாறு மற்றும் வல்லாரை இலை கீரை முதலிடம் வகிக்கிறது. அது மட்டுமல்லாமல் இதயத்தை வலுப்பெறச் செய்கிறது நன்கு ரத்த ஓட்டத்தை சீராக வைத்துக் கொள்வதற்கு இந்த வல்லாரைக் கீரை உதவுகிறது அதற்குப் பிறகு நம் உடம்பில் தாது சத்து அதிகப்படுத்த இது துணை புரிகிறது. அதனால் நிச்சயமாக உங்க உணவுகளில் வல்லாரை கீரையை வாரத்திற்கு ஒருமுறை யாவது சேர்த்துக் கொள்ள வேண்டும்.

செய்முறை:
வல்லாரைக் கீரையை வாங்கிக் கொண்டு வந்து உங்கள் வீடுகளில் இருக்கக்கூடிய அம்மியில் போட்டு நன்கு அரைக்க வேண்டும். பச்சையாக இருக்கக்கூடிய அந்த வல்லாரைக் கீரையை அம்மியில் அரைத்த பிறகு அதை ஒரு துணியில் வடிகட்டி அந்த சாறை எடுத்து குடிக்கலாம் அப்படி என்னால் குடிக்க முடியாது, நான் என்ன செய்வது என்றால் வல்லாரை கீரையை அப்படியே பொறியலாக வதக்கி சாப்பிடலாம் இது மிகவும் நல்லது அப்படி இல்லை என்றால் வல்லாரைக் கீரையை குழம்பாக வைத்து சாப்பாட்டில் கலந்து சாப்பிடலாம் எனக்கு இரண்டும் செய்ய முடியாது எங்கள் வீட்டுக்கு அருகாமையில் இந்த வல்லாரைக் கீரை கிடைக்காது என்று சொல்லக்கூடியவர்கள் மட்டும். உங்கள் வீட்டுக்கு அருகாமையில் இருக்கக்கூடிய நாட்டு மருந்து கடைகளுக்கு சென்று வல்லாரைக் கீரை லேகியம் அல்லது வல்லாரைக் கீரை டானிக் என்று கேட்டால் அவர்களை உங்களுக்கு தருவார்கள். அதை நீங்கள் சாப்பிடலாம் நன்கு ஞாபக சக்திகளை அது அதிகப்படுத்தும்.
குறிப்பு:
முடித்தவரை வல்லாரைக் கீரை பொரியலாகவும் மற்றும் குழம்பாகவும் வாரத்திற்கு ஒருமுறை அல்லது இரண்டு முறை சாப்பிடும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் பிள்ளைகளுக்கும் அதை சொல்லிக் கொடுங்கள் அவர்களுடைய ஞாபக சக்தியும் அதிகரிக்கும். சரி வல்லாரைக் கீரை கிடைக்காதவர்கள் நாட்டு மருத்துவ கடைகளில் வல்லாரைக் கீரை லேகியம் வாங்கிக் கொள்ளுங்கள் அதில் தேன் கலந்து கொடுப்பார்கள் சாப்பிடுவதற்கு கசப்பாக இருக்காது, இனிப்பாக இருக்கும் அதனால் முடிந்தவரை டானிக் வாங்குவதைவிட வல்லாரைக் கீரை லேகியம் வாங்கிக் கொள்ளுங்கள் அது உங்களுக்கு சாப்பிட நன்றாக இருக்கும். ஒரு மாதம் சாப்பிட்டால் போதுமானது அதற்குப் பிறகு உங்களுக்கு நல்ல வளர்ச்சி தெரியும் ஞாபக சக்திகள் அதிகமாவது உங்களால் உணர முடியும். அதன் பிறகு மூன்று மாத காலமோ அல்லது ஒரு மாதமோ போதும் என்று நீங்களே உணர்ந்து அதை நிறுத்தி விடலாம்..

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top