தீபாவளி தினத்தன்று கடவுளை வழிபடுவதற்கு உகந்த நேரம் எப்போது.?
ஆண்டிற்கு ஒரு முறை வரக்கூடிய தீபாவளி தினத்தன்று பல வீடுகளில் நோன்பு வழிபாடு செய்யப்படுகிறது அந்த வகையில் நோன்பு வழிபாடு தொடர்ந்து ஒரு வார காலமோ அல்லது 10 நாட்களோ விரதம் இருந்து கடவுளை வழிபாடு செய்யக்கூடிய அந்த தினம் கடவுள் உங்களுக்கு ஆசீர்வாதம் தந்து உங்கள் குடும்பத்தில் உள்ள கஷ்டங்களை தீர்த்து இனிவரும் ஆண்டு நல்ல ஆண்டாக அமைவதற்கு உறுதுணையாக இருக்கும் அந்த வகையில் தீபாவளி தினத்தன்று எந்த நேரத்தில் உங்களுடைய விரதம் முறையை வழிபாடு செய்ய வேண்டும் என்பதைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
தீபாவளி தினத்தன்று எந்த நேரத்தில் பூஜை செய்ய வேண்டும்
★ அதிகாலை 04:30 மணிக்குமேல் 6:00 மணிக்குள் எண்ணெய் தேய்த்து, கங்கா ஸ்நானம் செய்து கொள்ள உத்தமமாகும்.
★ காலை 07:00 மணிக்குமேல் 08:00 மணிக்குள் புத்தாடை அணிவது நல்லதாகும்.