சிறுநீரக கற்களை போக்க கூடிய எளிய வீட்டு மருத்துவம் / Siruneeraga Kal / Simple Home Remedies to Get Rid of Kidney Stones:-
சிறுநீரக கல்லடைப்பு எளிமையான வீட்டு மருத்துவத்தின் மூலமாக நாம் எப்படி குணப்படுத்துவது?. இன்று தண்ணீர் அதிக அளவு குடிக்காத காரணத்தினால் அல்லது அதிக அளவு தண்ணீர் குடித்தும் சிறுநீர் போகாமல் அடக்கி வைத்துக் கொண்டிருக்கும் காரணத்தினால் அல்லது இயற்கையான முறையிலேயே நம்முடைய கிட்னியில் சிறுநீரக கல் உருவாகிவிடுகிறது. அதனால் வலிகளும் வேதனைகளும் ஒவ்வொரு மக்களும் அனுபவிக்கின்றனர். எளிமையாக நம்முடைய வீட்டு மருத்துவத்தின் மூலமாக எப்படி இந்த கல்லடைப்பை குணப்படுத்துவது என்பது பற்றி தான் பார்க்கப் போகின்றோம்.
1. கல்லடைப்பினால் அவதிப்படும்போது முதல் உதவியாக ஆலிவ் ஆயிலுடன் எலுமிச்சை ரசத்தை 12 அவுன்ஸ் தண்ணீரில் கலந்து குடித்துக் கொண்டே இருந்தால் நிச்சயமாக கல்லடைப்பால் ஏற்படுகின்ற வலி நிவாரணம் கிடைக்கும்.
2. ஒரு நாளைக்கு மூன்றிலிருந்து நான்கு லிட்டர் தண்ணீரை அதிக அளவு குடிக்க வேண்டும்.
3. தினமும் இளநீரை காலையில் குடிக்க வேண்டும் அல்லது வாரத்திற்கு இரண்டு முறை இளநீரை குடிக்க வேண்டும்.
4. எலுமிச்சை பல சாற்று ஜூசை தினமும் அல்லது வாரத்திற்கு இரண்டு முறை சிறுநீரக கல் இருக்கக்கூடியவர்கள் குடிக்க வேண்டும்.
5. விதைகள் அதிகமாக இருக்கக்கூடிய பொருளை உணவில் சேர்த்துக் கொள்வதை குறைத்துக் கொள்ள வேண்டும் எந்த பொருளை நாம் மேல்லும் போது கரையாமல் வாயில் இருக்கிறதோ அந்த வகையான உணவுகளை நாம் குறைத்துக் கொள்ள வேண்டும்.
6. மிக முக்கியமான ஒரு விஷயம் கல் அளவை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கு நீங்கள் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் ஐ நிச்சயமாக ஒரு மருத்துவரை அணுகி தெரிந்து கொள்ள வேண்டும். உங்களுக்கு சிறுநீரகத்தில் எந்த அளவு கற்கள் இருக்கிறது அது உணவு மூலமாக சரி செய்யலாமா அல்லது மாத்திரையின் மூலமாக கதைக்கலாமா அல்லது ஆபரேஷன் செய்து அதை குணப்படுத்தலாமா என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.
7. வாழைத்தண்டு பொரியல் முடிந்தால் தினமும் சாப்பிட வேண்டும். ஒரு மாத காலம் அல்லது வாரத்துக்கு இரண்டு முறை எடுத்துக் கொண்டால் போதுமானது.
மேலே சொல்லப்பட்ட 7 பாயிண்டுகளும் நீங்கள் வீட்டில் இருக்கக்கூடிய பொருட்களை வைத்து பயன்படுத்தலாம் வாழைத்தண்டு பொரியலாக செய்து உண்பது மிகவும் சால சிறந்து. அந்த வாழத் தண்டில் தயிர் கலந்து சாப்பிட்டால் இன்னும் நன்றாக இருக்கும் அது மட்டுமல்லாமல் இவை அனைத்தும் நம் அன்றாட உணவுகளில் சேர்த்துக் கொள்ள வேண்டும். சிலது குறைக்க வேண்டும் மேலே சொல்லப்பட்ட விஷயங்களை தெளிவாக படித்து அதன்படி நடந்து கொண்டால் நிச்சயமாக சிறுநீரக கல் உங்களுக்கு திரும்ப வராமல் பாதுகாக்க முடியும்.
சில பேருக்கு இந்த சிறுநீரக கற்களால் ஏற்படுகின்ற வலி பெரும்பாலும் அதிக அளவு இருந்தால் நிச்சயமாக அருகில் இருக்கக்கூடிய மருத்துவரை அணுகி அவர்களிடம் தகுந்த முறையில் சிகிச்சையை எடுத்துக் கொள்ளுங்கள் எளிய முறையில் சிறுநீரக கல்லின் அளவு சிறியதாக இருக்கிறது என்னால் மருந்து உட்கொள்ள முடியாது. இயற்கையான முறையில் நான் குணப்படுத்திக் கொள்ள விரும்புகிறேன் என்று ஆசைப்பட்டால் மேலே சொல்லப்பட்ட அந்த ஏழு விஷயங்களையும் நீங்கள் கடைப்பிடியுங்கள். நிச்சயமாக உங்கள் வயிற்றில் இருக்கக்கூடிய சிறுநீரக கற்கள் அடித்துக் கொண்டு சிறுநீரகத்தின் சிறுநீர் வழியாக வெளியேற்றப்படும்..
Post Views: 86
Related