நீண்ட நாள் இருக்கக்கூடிய சளி தொல்லை நீங்க எளிமையான வீட்டு மருத்துவம்.!! அகத்திக்கீரை சாறு பலன்கள்.? A simple home remedy to get rid of colds that can last for a long time.!! Benefits of Agathi Keerai Juice.?

நீண்ட நாள் இருக்கக்கூடிய சளி தொல்லை நீங்க எளிமையான வீட்டு மருத்துவம்.!! அகத்திக்கீரை சாறு பலன்கள் அ பயன்கள்.? A simple home remedy to get rid of colds that can last for a long time.!! Benefits of Agathi Keerai Juice.?

 

நீண்ட நாட்களாக எனக்கு சளி தொல்லை இருந்து கொண்டிருக்கிறது என்ன மருந்து சாப்பிட்டாலும் எனக்கு உடனடியாக சளி குணமாகவில்லை. அப்படி சொல்லக்கூடிய ஒவ்வொருவரும் இந்த வீட்டு மருத்துவ முறையை பயன்படுத்துவதன் மூலமாக நிச்சயமாக ஒரு நல்ல பலனை உங்களால் அடைய முடியும். ஆம் இன்று ஜலதோஷம் தீர எளிமையான வீட்டு மருத்துவத்தை பற்றி பார்க்க போகின்றோம், நீண்ட நாள் தீராத சளி கூட தீர்ந்து போகும் ஆம் வாருங்கள் பார்ப்போம்.

மூலப் பொருள்:-

 

அகத்திக்கீரை சாறு இரு துளி மூக்கில் விட தும்பல் ஜலதோஷம் தீரும். அகத்திப்பூ சாறு இரு துளி மூக்கில் விட தலைநீர் ஜலதோஷம் நீங்கும்.

செய்முறை விளக்கம்:-

 

அகத்திக் கீரையை எடுத்துக்கொண்டு அதை நன்கு மிக்ஸியில் போட்டு அல்லது அம்மியில் அரைக்க வேண்டும். அப்படி அரைக்கும் போது அதிலிருந்து சாறு நமக்கு கிடைக்கும் அதை ஒரு துணியில் போட்டு நன்கு வடிகட்டினால் தூய்மையான அகத்திக் கீரை சாறு கிடைக்கும். அந்தச் சாறு இரண்டு சொட்டு மூக்கில் விட்டால் ரொம்ப நாள் இருக்கக்கூடிய ஜலதோஷ பிரச்சனை நீங்கும், இனி உங்கள் வாழ்க்கையில் சளி பிடிக்கும் தொல்லை அவ்வளவு எளிதில் உங்கள் உடலுக்கு ஏற்படாது. அதேபோல அகத்திப்பூ சாறு இரண்டு துளி எடுத்து உங்களுடைய மூக்கில் விட்டால் தலைநீரில் இருக்கக்கூடிய ஜலதோஷம் நீங்கும் அதாவது சைனஸ் பிரச்சனை என்று சொல்லக்கூடிய ஜலதோஷம் நீங்கும்.

குறிப்பு:-

 

ஐந்து வயதுக்கு மேல் இருக்கக்கூடிய சிறியவர்கள் முதல் 100 வயது வரை இருக்கக்கூடிய பெரியவர்கள் வரை அத்தனை பேரும் இதை பயன்படுத்தலாம் எந்தவித பக்க விளைவும் கிடையாது. இதை தினமும் காலை மாலை இரு வேளை ஒரு நாளைக்கு என்ற முறையில் எடுத்துக் கொண்டால் போதுமானது. ஒரு வாரம் எடுத்துக் கொண்டாலே நல்ல பலனை உங்களால் அனுபவிக்க முடியும் ஒரு சிலருக்கு ஓர் இரு நாட்களில் தெரிந்துவிடும் ஒரு சிலருக்கு ஒரு வார காலத்தில் முழுமையாக சளி தொல்லையில் இருந்து விடுதலை கிடைக்கும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top