நீண்ட நாட்களாக தீராத வயிற்று வலியை குணப்படுத்தும் எளிய வீட்டு மருத்துவ முறை / Simple Home Remedy to Cure Relentless Stomach Ache:-
நீண்ட நாட்களாக வயிற்று வலியால் அவதை படக்கூடியவர்கள் இந்த மருத்துவ முறையை பயன்படுத்திக் கொண்டு தீராத நாள்பட்ட வயிற்று வலியை எளிமையான முறையில் குணப்படுத்தலாம். ஆம் வாருங்கள் அதைப்பற்றி தான் இன்று நாம் இந்த பதிவில் பார்க்க போகின்றோம். இன்றைய காலகட்டத்தில் வயிற்று வலி வந்தால் நிச்சயமாக தாங்க முடியாத அளவிற்கு அந்த வலிகள் இருக்கின்றன, அப்படி ஒருவருக்கு வயிறு வலி வரும் போதும் அல்லது நீண்ட நாட்களாக வயிறு வலி இருக்கும்போதும் அவர்கள் எப்படி தங்களுடைய வீட்டு மருத்துவ முறையை பயன்படுத்தி வயிற்று வலியை போக்க முடியும் என்பதை பற்றி தான் தெளிவாக பார்க்கப் போகின்றோம் வயிற்று வலியை குணப்படுத்துவது எப்படி.
மூலப் பொருள்:-
அகத்திக்கீரை பொடியை நீர் அல்லது பாலில் கலந்து குடித்து வர நாள்பட்ட வயிற்று வலி குணமாகும்.
செய்முறை விளக்கம்:-
உங்கள் வீட்டுக்கு அருகில் அகத்திக்கீரை கிடைத்தால் அதை நன்கு காய வைத்த பிறகு பொடி செய்து கொள்ள வேண்டும். அந்த பொடியை நீர் அல்லது பாலில் கலந்து தினமும் இரவு குடித்து வந்தால் நாள்பட்ட வயிற்று வலி எதுவாக இருந்தாலும் குணமாகும். ஒருவேளை உங்களால் அகத்திக் கீரையை பொடி செய்ய முடியாது அல்லது அதற்கான நேரம் எனக்கு இல்லை என்றால் நாட்டு மருந்து கடைகளில் அகத்திக்கீரை பொடி என்று கேட்டால் தருவார்கள் அதை வாங்கிக்கொண்டு தினமும் இரவு பாலில் அல்லது வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து குடித்து வந்தால் எவ்வளவு பெரிய வயிற்று வலியாக இருந்தாலும், நீண்ட நாட்களாக வயிற்று வலிய அனுபவித்துக் கொண்டிருந்தாலும் இதை நீங்கள் பயன்படுத்துவதன் மூலமாக அறவே அறுத்து எறிய முடியும்.
குறிப்பு:-
சிறியவர் முதல் பெரியவர் வரை இதை பயன்படுத்திக் கொள்ளலாம் அதற்கு முன் உங்களுக்கு நீண்ட நாட்களாக வயிற்று வலி இருந்தால் முதலில் உங்கள் வீட்டுக்கு அருகாமையில் இருக்கக்கூடிய ஒரு மருத்துவரை அணுகி வயிற்றை ஸ்கேன் செய்து பார்க்க வேண்டும், அதில் உங்களுக்கு எல்லாமே நார்மல் என்று வந்த பிறகு நீங்கள் இதை பயன்படுத்தினால் உங்களுக்கு நல்லது. ஏனென்றால் நீண்ட நாட்களாக வயிற்று வலி இருக்கிறது என்றால் நிச்சயமாக வயிற்றை ஸ்கேன் செய்து பார்க்க வேண்டும் எந்த விதமான விளைவும் இல்லை நன்றாக இருக்கிறது என்று தெரிந்த பிறகு வீட்டு மருத்துவத்தை பயன்படுத்துங்கள் அதுதான் நன்மை அளிக்கும்.