செரிமான கோளாறு நீங்க எளிமையான வீட்டு மருத்துவ முறை | Simple Home Remedies for Indigestion :-
செரிமான கோளாறு நீங்க எளிமையான வீட்டு மருத்துவ முறையை பற்றி தான் இன்று நாம் இந்த பதிவில் பார்க்க போகின்றோம். இந்த காலகட்டத்தில் நாம் கண்டதை உண்பதால் நம்முடைய வயிறு எது நல்லது எது கெட்டது என்று பிரித்துப் பார்ப்பதற்கு நேரம் கிடைக்கவில்லை. அதனால் அதற்கு போதிய ஊட்டச்சத்து அதாவது நார்ச்சத்து குறைபாட்டால் செரிமான கோளாறுகள் ஏற்படுகின்றன. ஒரு உடலுக்கு மிக முக்கியம் நார்சத்து இந்த நார்ச்சத்து உடலில் இருந்தால் தான் நல்ல ஜீரண சக்தியாகும். நாம் உண்ணக்கூடிய உணவு செரிமானமாகும், காலையில் அது வெளியேற்றப்படும்.
இந்த செரிமான கோளாறு நீங்க எளிமையான வீட்டு மருத்துவ முறை பற்றி தான் பார்க்கப் போகின்றோம். அதற்கு முன்னாடி செரிமான கோளாறு இருக்கக்கூடியவர்கள் ஒரு நாளைக்கு 3 லிட்டர் தண்ணீர் அல்லது 4 லிட்டர் தண்ணீர் வரை குடிக்க வேண்டும்.
மூலப்பொருள்
விளக்கம்
தினமும் இரவு நேரத்தில் புதினா சாறுடன் எலுமிச்சை சாறு கலந்து குடித்து வந்தால் செரிமான கோளாறு நீங்கி உடல் ஆரோக்கியத்தை உங்களால் பெற முடியும். அதேபோல செரிமான கோளாறுகள் இருக்கக்கூடியவர்கள் காரம் புளி மசாலாவை குறைத்துக் கொள்ள வேண்டும். ஒரு நாளைக்கு மூன்று லிட்டர் தண்ணீரில் இருந்து 4 லிட்டர் தண்ணீர் வரை எடுத்துக் கொள்ள வேண்டும். இது அவர்கள் உடலில் இருக்கக்கூடிய நீர் சக்தியை அதிகரிக்கும்.