குழந்தை பிறப்பு ஐந்தாம் 5 ஆம் கட்டம் சொல்லும் காரணம் என்ன
திருமணத்திற்கு பிறகு கணவன் மனைவி இருவருடைய ஜாதகத்திலும் ஐந்தாம் கட்டம் என்பது குழந்தையை குறிக்கக்கூடிய கட்டமாகும் ஒருவருக்கு குழந்தை பாக்கியம் உள்ளதா இல்லையா என்பதை அறிவதற்கு ஐந்தாம் கட்டமே மிகவும் நமக்கு பக்க பலமாக உதவுகிறது அந்த வகையில் ஒவ்வொருவருக்கும் குழந்தை நமக்கு பிறக்கக்கூடிய காலம் அல்லது காலதாமதம் எதனால் ஏற்படுகிறது என்பதை இந்த ஐந்தாம் கட்டத்தை வைத்து நம்மால் கணிக்க முடியும்.

குழந்தை பிறப்பு தாமதம் செய்யக்கூடிய கிரகங்கள் என்ன.
- சனி
- செவ்வாய்
- ராகு
- கேது
- குரு
மேலே சொல்லப்பட்ட ஐந்து கிரகங்களில் யாராவது ஒருவரோ அல்லது இருவரோ சேர்ந்து ஐந்தாம் கட்டத்தில் இருந்தால் அந்த ஜாதகர்களுக்கு குழந்தை பிறப்பது தாமதம் ஏற்படும்.
மேலே சொன்ன ஐந்து கிரகங்களின் பார்வை ஐந்தாம் கட்டத்தின் மீது விழும்போதும் குழந்தை பிறப்பு தாமதம் ஏற்படும்.
ஐந்தாம் கட்டத்தின் ஓனர் ஆறு , எட்டு பன்னெண்டு மறைவு ஸ்தானங்களில் இருக்கும் போது குழந்தை பிறப்பு என்பது அரிது தாமதம் மிகவும் அதிகமாக ஏற்படும்.
ஆனால் கணவன் மனைவி இருவருக்கும் குழந்தை பாக்கியம் பார்க்க வேண்டும் என்றால் கண்டிப்பாக இருவருடைய ஜாதகத்தையும் அனலைஸ் பண்ணி ஒரு முடிவுக்கு வர முடியுமே தவிர ஒருவருடைய ஜாதகத்தில் தடைகள் இருக்கலாம் மற்றொருவரின் உடைய ஜாதகத்தில் குழந்தை பிறப்புக்கான அமைப்பு லாபமாக இருக்கலாம் ஆதலால் இருவருடைய ஜாதகத்தையும் வைத்து கணிக்கும் போது மட்டுமே சரியான பலனை ஒருவரால் நிர்ணயம் செய்ய முடியும்