ஜாதகத்தில் லக்னம் வலிமை பெற்றால் அந்த ஜாதகர் ஜெய்த்து விடுவார்
இந்த உலகத்தில் பிறந்த ஒவ்வொருவரும் தங்களுடைய வாழ்க்கையில் ஜெயிப்பார்களா அல்லது தோல்வி அடைவார்களா என்பதை எளிதாக அவர்களின் உடைய ஜாதகத்தை பார்த்து நம்மால் கணிக்க முடியும்.

எளிதில் நம்முடைய குடும்பத்தில் பிறந்த உறுப்பினர்களும் சரி அல்லது நாம் ஜோதிடம் பார்க்கக்கூடிய நண்பர்களுக்கும் சரி அவர்கள் பிறப்பு ஜாதகத்தில் லக்னாதிபதி உச்சம் மற்றும் ஆட்சி அல்லது நட்பு இந்த மூன்றில் ஏதேனும் ஒரு கட்டத்தில் லக்னாதிபதி இருந்தால் நிச்சயமாக அந்த ஜாதகர் அவருடைய வாழ்க்கையில் ஜெயித்து விடுவார்.
ஒரு வேலை லக்னாதிபதி நீச்சம் வாங்கியிருந்தாலோ அல்லது பகை வீட்டில் இருந்தாலோ அந்த ஜாதகர் கண்டிப்பாக பல இன்னல்களை சந்திப்பார் கடன் நோய் வம்பு வழக்கு கோர்ட்டு மற்றும் நிம்மதி இல்லாத வாழ்க்கை இப்படி பலவகையான இன்னல்களை அந்த ஜாதகர் சந்திப்பார்.
ஆகையால் நீங்கள் ஜோதிடம் பார்க்கக் கூடியவர்களாக இருந்தாலும் சரி, அல்லது ஜோதிடம் தெரியாதவர்களாக இருந்தாலும் சரி ஒருவருடைய ஜாதகத்தில் ராசி கட்டத்தை பார்த்த உடனே அந்தக் கட்டத்தில் லக்னாதிபதி உச்சம் மற்றும் ஆட்சி மற்றும் நட்பு அல்லது திரிகோண ஸ்தானங்களில் இருந்தாலும் சரி அந்த ஜாதகர் நிச்சயமாக அவர்கள் வாழ்க்கையில் ஜெயித்து பொன் பொருள் வீடு மனை பெற்று சுக வாழ்க்கை வாழ்வார்