வெள்ளிக்கிழமை அன்று மாரியம்மன் வணங்கினால் சகல நன்மைகளும் கிடைக்கும் / வெள்ளிக்கிழமையில் மாரியம்மன் வணங்கினால் என்ன நன்மைகள் கிடைக்கும் :-
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையன்று ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி மாரியம்மன் வழிபாடு என்பது மிகச் சிறப்பான வழிபாடு. எந்த ஒரு தடங்கல் தடைகள் இருந்தாலும் மாரியம்மனை வணங்குவதன் மூலமாக நிவர்த்தி செய்து கொடுக்கப்படும். மாரியம்மனை வழிபட்டால் என்னென்ன நன்மைகள் நடக்கும் என்பதை பார்ப்போம்.
மாரியம்மன் வெள்ளிக்கிழமையில் வணங்கினால் நமக்கு என்ன நன்மைகள் கிடைக்கும்:-
மாரியம்மனை வழிபடுவதன் மூலமாக நல்ல காரியங்கள் உங்களுக்கு கை கூடி வரும் இதுவரை தடைப்பட்டு கொண்டே போன திருமண தடைகள் நீங்கி ஒரு நல்ல காலத்தில் காலடி எடுத்து வைப்பீர்கள்.
மாரியம்மன் வணங்குவதன் மூலமாக குழந்தை பாக்கியம் கிடைக்கும் குழந்தைகள் சரியாக பேசாமல் இருந்தால் குழந்தை பொம்மை வாங்கி கொடுக்கின்றேன் என்று வேண்டிக் கொண்டால் எண்ணி ஒரு வருடத்தில் குழந்தை நன்றாக பேசும்.
மாரியம்மன் க்கு வெள்ளிக்கிழமையில் பால் அபிஷேகம் செய்தால் உங்களுடைய பாவங்கள் விலகி மனகஷ்டங்கள் விலகி ஒரு புது வாழ்க்கையை ஆரம்பிக்க அது தொடக்கப் புள்ளியாக அமையும்.
உங்களுக்கு எந்த ஒரு வேண்டுதல் இருந்தாலும் மாரியம்மனிடம் வெள்ளிக்கிழமை போய் வேண்டிக்கொண்டு எனக்கு இந்த வேண்டுதலை நிவர்த்தி செய்து கொடுங்கள் உங்களுக்கு நான் பொங்கல் வைக்கின்றேன் என்று வேண்டிக் கொண்டால் நீங்கள் வேண்டிய அத்தனை காரியங்களும் நடக்கும் இது சத்தியம்.