வெயில் காலத்தில் முகப்பரு வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும் மற்றும் வெயில் காலத்தில் முகப்பரு அதிகமாக வரக்கூடியவர்கள் என்ன செய்தால் முகப்பரு போகும் வாருங்கள் தெரிந்து கொள்வோம் :-
வெயில் காலம் என்றாலே கண்டிப்பாக முகத்தில் அதிக அளவு எண்ணெய் பசை அதிகரிக்கும். இதனால் முகத்தில் முகப்பரு முகம் கருவடைதல் இது போன்ற பல நிகழ்வுகள் நம்முடைய தோலில் நிகழும் அந்த வகையில் இந்த முகப்பரு குறைப்பதற்கும் முகப்பரு வராமல் தடுப்பதற்கும் நாம் என்ன செய்ய வேண்டும்.
இயற்கையான முறையில் நாம் செய்யக்கூடிய சில விஷயங்கள் நம் முகத்தை மிக அழகாக வைத்துக் கொள்வதற்கும் முகம் பளபளப்பாக இருப்பதற்கும் இது நமக்கு பல நன்மைகளை தருகிறது வாருங்கள் என்ன செய்தால் நம் முகத்தில் இருக்கக்கூடிய முகப்பரு போகும் என்பதை பார்க்கலாம்.
முடிந்தவரை ஆயில் ஐட்டங்களை எடுத்துக் கொள்வதை தவிர்த்துக் கொள்வது நல்லது முகத்தில் அதிக அளவு பிம்பிள் வருவதற்கு இதுவும் ஒரு காரணம் அதே போல அதிக அளவு சூடான பொருட்களை வெயில் காலங்களில் எடுத்துக் கொள்வதும் முகப்பரு வருவதற்கு ஒரு விடயமாக இருக்கிறது.
முகப்பரு போக எளிமையான கை வைத்தியம்
முகப்பரு போக வேண்டுமா கண்டிப்பாக நீங்கள் இரவு தூங்கும் போது நம் முன்னோர்கள் செய்த அதே காரியம் தான் அது என்னவென்றால் நீங்கள் இரவு தூங்கும் போது உங்களுடைய முகத்தில் சந்தனத்தை பூசிக்கொண்டு தூங்க வேண்டும் 8 மணி நேரம் அது உங்கள் முகத்தில் இருக்கும் போது, உங்கள் முகப்பரு மற்றும் உங்கள் முகம் வெண்மையாகவும் உங்கள் உங்கள் முகம் குழந்தையின் சருமத்தை போல் தொட்டால் குழந்தை தொடுவதைப் போல ஒரு உணர்வுகளை தரக்கூடிய அளவுக்கு மென்மையாக மாற்றக்கூடிய தன்மை இந்த சந்தனத்திற்கு உண்டு.
அதனால் இரவு தூங்கும் போது சந்தனத்தை உங்க முகத்தில் பூசிக்கொண்டு தூங்குவதன் மூலமாக முகப்பரு எண்ணெய் பசை மற்றும் முகம் பளபளப்பாகவும் மென்மையாகவும் மாறுவது என்பது எந்த வித சந்தேகமும் உங்களுக்கு வேண்டாம் தினமும் இதை ஒரு மாத காலம் பயன்படுத்தும் போது ஒரு நல்ல மாற்றத்தை உங்களால் காண முடியும்.