வீடு என்றால் கோவிலுக்கு சமம் அதனால்தான் நம் முன்னோர்கள் வீட்டுக்குள் பூஜை அறை என்று ஒன்றை வைத்து இறைவனை வழிபடும் பழக்கத்தை வழக்கமாக கொண்டிருந்தார்கள்
கோவிலாக பார்க்கக்கூடிய நம்முடைய வீட்டில் நாம் செய்யக் கூடாத சில விஷயங்கள் என்று உள்ளன அதை தான் இன்று இந்த பதிவில் நாம் பார்க்கப் போகின்றோம்
# வெள்ளிக் கிழமைகளில் வீட்டை பெருக்கி வெளியில் கொட்டக்கூடாது
# செவ்வாய் கிழமைகளில் வீட்டை பெருக்கி அல்லது சுத்தம் செய்து வெளியில் கொட்டக்கூடாது
# மாலை 6 மணி அதாவது விளக்கு வைத்து உடன் வீட்டை சுத்தம் செய்து வெளியில் கொட்டக்கூடாது
# விளக்கு வைத்து அதற்குப் பிறகு மாலை 6 மணிக்கு மேல் பணம் கொடுத்து வாங்கி இருக்க கூடாது
# தினமும் காலையில் அல்லது மாலையில் நம்முடைய வீட்டில் இருக்கக்கூடிய பூஜை அறையில் நிச்சயமாக இறைவனுக்கு பூஜை செய்ய வேண்டும் இது நம்முடைய வீட்டை இறை ஆண்மையுடன் வைத்துக்கொண்டு
# தினமும் இறைவனை வணங்கிய பிறகு காக்கைக்கு நம் முன்னோர்களை நினைத்து உணவளிக்க வேண்டும். அதாவது ஒரு பிடி உணவாவது நம் முன்னோர்களை நினைத்து காகத்திற்கு வைக்க வேண்டும்
இவ்வாறு செய்யும்போது நம் வீட்டில் இருக்கக் கூடிய தெய்வீக சக்தி நிறைந்த கடவுள் நம்மோடு வந்து ஐக்கியம் ஆவார் என்பது ஐதீகமாக கருதப்பட்டு வருகிறது