விநாயகரை எப்படி வழிபட்டால் நமக்கு நன்மைகளை விநாயகர் கொடுப்பார் மற்றும் விநாயகரை எப்படி வழிபடுவது.
முதல் முதல் கடவுள் என்று சொல்லக்கூடிய விநாயகர் பெருமாளை எப்படி வழிபாடு செய்வது என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் பொதுவாக விநாயகர் வழிபாடு என்பது மிக முக்கியமான வழிபாடு எந்த ஒரு காரியத்தை செய்வதற்கு முன் விநாயகரை முதலில் வழிபாடு செய்து விட்டு அந்த காரியத்தை செய்வதன் மூலமாக செய்யக்கூடிய காரியங்களில் எளிதாகவும் நன்மைகளை கொடுக்கக் கூடிய வகையிலும் இருக்கும் என்பது ஐதீகம்.
நீங்கள் விநாயகரை வழிபாடு எப்படி செய்ய வேண்டும்.
முதலில் விநாயகரை வணங்க வேண்டும் பிறகு இரண்டு கைகளால் தலையில் கொட்டு இட வேண்டும் மூன்றாவதாக இரண்டு காதுகளையும் பிடித்து தோப்பு காரணம் போட வேண்டும் இது முதலில் நாம் விநாயகரை வணங்கி செய்ய வேண்டிய விஷயம்.
அடுத்தது விநாயகரை 9 முறை சுற்றிவர வேண்டும் அல்லது 25 முறை சுற்றிவர வேண்டும் அல்லது மூன்று முறை சுற்றிவர வேண்டும் அல்லது ஒரு முறை சுற்றிவர வேண்டும் சுற்றுவதற்கான எண் வரிசை இதுதான் இதன் அடிப்படையில் சுற்றுவதன் மூலமாக நமக்கு நன்மைகள் கிடைக்கும்.