விக்கல் நிக்காமல் வந்து கொண்டிருக்கிறது என்ன செய்ய வேண்டும் மற்றும் விக்கல் உடனடியாக நிற்க என்ன செய்ய வேண்டும் வாருங்கள் தெரிந்துகொள்வோம்.
அதிகளவு காரங்களை உணவில் சேர்த்து சாப்பிடுவதால் வயிற்றில் புண்கள் ஏற்பட்டு அதனால் ஒரு சில நேரங்களில் நமக்கு நிற்காமல் விக்கல் வந்து கொண்டே இருக்கும் அப்போது நாம் என்ன செய்ய வேண்டும் என்று பலருக்கும் சந்தேகம் ஏற்படும் உடனடியாக மருத்துவரை என்னால் பார்க்க முடியாது மிக முக்கியமான ஒரு சில வேலைகளில் இருக்கின்றேன். ஆதலால் ஒரு சில பொருட்களை வீட்டில் இருக்கிறது. அதை வைத்து நாம் எப்படி விக்கலை சரி செய்ய வேண்டும் என்று ஒரு சிலருக்கு சந்தேகம் இருக்கும் அதையும் இந்த பதிவில் பார்க்க போகின்றோம்.
இந்த விக்கல் வருவதற்கு உணவு மட்டும் காரணம் அல்ல நாம் எடுத்துக் கொள்ளக்கூடிய மருந்தும் ஒரு மிக முக்கிய காரணமாக இருக்கிறது அது என்னவென்றால் ஒரு சிலர் சீராய்டு என்று சொல்லக்கூடிய மருந்தை எடுத்துக் கொள்ளும் போது விக்கல் வந்து நிற்காமல் வந்து கொண்டிருக்கும் ஒரு சில மணி நேரம் அது உடலில் இருக்கக்கூடிய அந்த சீராய்டினுடைய தன்மை குறையும்போது விக்கல் குறைய ஆரம்பிக்கும் அதனால் மருந்தும் ஒரு காரணம் மற்றும் உணவும் ஒரு காரணம் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் வாருங்கள் நீண்ட நேரமாக நிக்காமல் வருகின்ற விக்கலை எப்படி சரி செய்வது குணப்படுத்துவது என்பதை பார்க்கலாம்.
நீண்ட நேரம் விக்கலை குணம் செய்ய மருந்து
திப்பிலி எட்டு பங்கு எடுத்துக் கொள்ளுங்கள் மற்றும் சீரகம் 10 பங்கு சேர்த்துக் கொள்ளுங்கள் இரண்டையும் நன்கு பொடி செய்து வைத்துக்கொண்டு இதனுடன் சிறிது சர்க்கரையும் நீங்கள் கலந்து சாப்பிட்டு வந்தால் தீராத விக்கல் தீரும் வயிற்று பசி நன்குெடுக்கும் மற்றும் உடலில் கொழுப்புகள் சேராமலும் பார்த்துக் கொள்ளும்