வாஸ்து நாளில் நாம் என்ன செய்யலாம் :-
வாஸ்து நாளில் நாம் என்ன செய்யலாம் என்பதை பற்றி இந்த பதிவில் நாம் தெளிவாக பார்க்க போகின்றோம் பொதுவாக வீடு கட்டுவதாக இருந்தால் கண்டிப்பாக ஒவ்வொருவரும் வாஸ்து பார்க்காமல் எதையும் செய்ய மாட்டார்கள் அந்த அளவிற்கு வாஸ்து பகவான் மிக முக்கியமானவராக திகழ்கின்றார்.
வீட்டுக்கு போர் போடுவதாக இருக்கட்டும், வீடு கட்டுவதாக இருக்கட்டும் அல்லது நிலத்தை வைத்து எந்த ஒரு பூமி பூஜை செய்வதாக இருக்கட்டும் அதற்கு மிக முக்கியமான நாள் உகந்த நாள் வாஸ்து நாள் ஆகும் அப்படிப்பட்ட வாஸ்து நாளுக்கு உரிய வாஸ்து பகவான் மற்றும் வாஸ்து நாளில் நாம் என்ன செய்யலாம் என்பதை பற்றி பார்ப்போம்.
வாஸ்து நாளில் என்ன செய்யலாம்?
1.வாஸ்து பகவான் கண் விழிக்கும் நாளாகும்.
2.மேலும்,சித்திரை, வைகாசி, ஆடி, ஆவணி, ஐப்பசி, கார்த்திகை, தை, மாசி என எட்டு மாதங்களில் வரும் வாஸ்து நாட்களில் பூமி பூஜை செய்யலாம்.
3.வாஸ்து நாளில், வாஸ்து பகவானை வழிபடுவது சிறப்பு.
4.வீடுகளில் திருஷ்டியைப் போக்கி, தொழிலில் மேன்மையும் உத்தியோகத்தில் உயர்வும் தந்து அருளுவார் வாஸ்து பகவான்.
5. வீட்டிற்கு போர் போடுவதாக இருந்தாலும் சரி வீடு கட்டுவதாக இருந்தாலும் சரி வாஸ்து பகவானை நினைத்து அவருக்கு மனதார வேண்டிக் கொண்டு வாஸ்து நாள் என்று ஆரம்பித்தால் உங்களுக்கு சகல நன்மைகளும் கிடைக்கும் கட்டக்கூடிய புதிய வீட்டில் சகல ஐஸ்வர்யங்களும் கூடும்.