வராகி அம்மன் வழிபாடு எப்படி செய்வது.?
ராஜராஜ சோழன் போருக்கு போவதற்கு முன்னாடி வாராஹி அம்மனை வணங்கிவிட்டு தான் போருக்கு செல்வார் அந்த வகையில் வராஹி அம்மன் மிகவும் சக்தி வாய்ந்த கடவுளாக பார்க்கப்படுகிறது அந்த வகையில் நம் வீட்டில் இருக்கக்கூடிய அல்லது பொதுவாக வராகி அம்மனை எப்படி வழிபடுவது வராகி அம்மனை வழிபடுவதால் நமக்கு எப்படி நன்மைகள் எல்லாம் கிடைக்கும் என்பதை நீங்கள் வழிபட்ட பிறகு உங்களுக்கு புரியும்.
வராகி அம்மன் வழிபாடு எப்படி செய்வது என்று கேட்கக் கூடியவர்களுக்கான பதிவு தான் இது வராகி அம்மன் வழிபடுவது மிகவும் எளிமையான முறையில் நாம் நம்முடைய வீட்டில் இருந்தே செய்யலாம் வாருங்கள் அதை பார்ப்போம்.
வாராகி அம்மன் வழிபாடு
★ வாராகி அம்மனை பஞ்சமி தினத்திலும், ஞாயிற்றுக்கிழமை இராகு கால நேரத்திலும் வழிபடுவது சிறப்பாகும்.
★ வீட்டின் பூஜை அறையில் வாராகி அம்மனுக்கு உகந்த செவ்வரளி மலர்களை சாற்றி, வாராகி அம்மனுக்கு பிடித்த கிழங்கு வகைகளை நிவேதனமாக படைத்தல் சிறந்ததாகும்.