மூலம்நோய் குணமாக எளிய வீட்டு மருத்துவம் / Simple Home Remedies to cure the piles

மூலம்நோய் குணமாக எளிய வீட்டு மருத்துவம் / Simple Home Remedies to cure the piles:-

 

இன்றைய காலகட்டத்தில் நாம் அதிகமாக தண்ணீர் குடிப்பது கிடையாது அதனால் நமக்கு மூலம் நோய் ஏற்பட்டு விடுகிறது, இதனால் நமக்கு மோஷன் கெட்டியாகவும், மோஷன் போகும்போது வலியும் எரிச்சலும் ஏற்படுகிறது. இதை எளிமையாக நாம் வீட்டு வைத்தியத்தின் மூலமாக குணப்படுத்தலாம் அதைப்பற்றி தான் பார்க்கப் போகின்றோம். இதை முழுமையாக படித்தால் உங்களுக்கு ஒரு தெளிவு பிறக்கும்.

 

மூலப் பொருள்:-

 

மூலம் நோய் உள்ளவர்கள் தினசரி உணவுக்குப் பின்னர் காலையிலும் மாலையிலும் 25 உலர் திராட்சை பழங்களை தொடர்ந்து ஏழு நாட்கள் சாப்பிட்டு வந்தால் மூலம் நோய் குணம் பெறும்.

 

தினமும் உணவுக்குப் பின் காலை மற்றும் இரவு பூம்பழம், அதாவது பூ வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் உங்களுக்கு மூல நோய் எப்போதும் உங்களிடம் வராது.

செய்முறை விளக்கம்:-

 

நாட்டு மருந்து கடைகள் அல்லது மளிகை கடைகளில் இந்த உலர் திராட்சை பழம் நிச்சயமாக இருக்கும் அதை நீங்கள் வாங்கிக் கொண்டு வந்து உணவுக்கு பின் காலை இரவு 25 உலர் திராட்சைகளை சாப்பிட்டு வந்தால். மூலம் நோய் குணமாகும் உங்களுக்கு மூல நோய் திரும்பவும் வரக்கூடாது என்று நினைத்தால் தினமும் காலை மாலை இருவேளை பூ வாழைப்பழம் (பூம்பழம்) என்று சொல்லக்கூடிய அந்த வாழைப்பழத்தை சாப்பிட்டு வர வேண்டும். இரண்டு வேலை என்னால் சாப்பிட முடியாது என்றால் இரவு தூங்குவதற்கு முன் ஒரு பூம்பழத்தை சாப்பிட்டு வந்தால் நிச்சயமாக மூல நோய் உங்களுக்கு வராது.

குறிப்பு:-

 

வாழைப்பழத்தில் பல வகை உண்டு அதில் மூல நோய்க்கு என்று இருக்கக்கூடிய பலம் தான் பூம்பழம் பூம் பழம் என்று கேட்டால் கொடுப்பார்கள் வாழைக்காய் மண்டையில் அதை வாங்கிக் கொண்டு வந்து தினமும் இரவு நேரத்தில் உறங்குவதற்கு முன் சாப்பிட்டு விட்டு படுங்கள் நிச்சயமாக உங்களுக்கு மூல நோய் வராது. அதே போல காரம், புளி, இஞ்சி, பூண்டு உங்களுடைய உணவுகளில் குறைத்துக் கொள்ள வேண்டும் அதிகளவு தண்ணீர் குடிக்க வேண்டும், நார்ச்சத்து அதிக அளவு இருக்கக்கூடிய பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top