தமிழர்களால் வணங்கப்படக்கூடிய தமிழ் கடவுளான முருகப் பெருமானை எப்படி வழிபட வேண்டும் என்று பல பேருக்கு சந்தேகம் இருந்தாள் இந்த பதிவை படிக்கும் போது உங்களுடைய சந்தேகம் தீர்ந்துவிடும்.
முருகப்பெருமான் வழிபாடு என்பது மிக முக்கியமான வழிபாடாக தமிழ்நாட்டில் பார்க்கப்படுகிறது குறிப்பாக ஒவ்வொரு மனிதனுக்கும் முருகனின் அருள் கண்டிப்பாக வேண்டும் நம் வாழ்க்கையில் ஈடு கட்ட வேண்டும் செல்வ செழிப்போடு வாழ வேண்டும் மன நிம்மதியோடு வாழ வேண்டும் என்றால் நீங்கள் முருகப்பெருமானை கண்டிப்பாக வாரத்திற்கு ஒரு முறையாவது வணங்க வேண்டும்.
ஊருவேளை என்னால் வாரத்திற்கு ஒருமுறை முருகனை வழிபட முடியாது நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்கக் கூடியவர்களுக்கான பதிவாக கூட இது எடுத்துக் கொள்ளலாம் ஏனென்றால் முருகப்பெருமானை குறிப்பிட்ட ஒரு சில தினங்களில் நீங்கள் வணங்கினால் உங்களுடைய வாழ்க்கையில் முழுமையான பலனை முருகப்பெருமானிடம் இருந்து உங்களால் எடுத்துக் கொள்ள முடியும் முருகப்பெருமானம் அந்த நாளன்று சந்தோஷமாக இருப்பார் நீங்கள் கேட்கக்கூடிய வரங்களையும் ஆசைகளையும் நிறைவேற்றித் தருவார்.
முருகப்பெருமான் வழிபாடு மிக முக்கியமான வழிபாடு வாரம் தோறும் என்னால் வணங்க முடியவில்லை என்று சொல்லக்கூடியவர்கள் கார்த்திகை நட்சத்திரம் என்பது மாதத்திற்கு ஒரு முறை இரண்டு முறை வரும் நீங்கள் கேலண்டரை பார்த்துக்கொண்டே இருங்கள். கண்டிப்பாக தெரியும்.
அப்படி விரதம் இருந்து நீங்கள் முருகப்பெருமானை வழிபாடு செய்வதால் நிறைவான அறிவு உங்களுக்கு கிடைக்கும் மற்றும் நிலையான செல்வம் உங்களுக்கு கிடைக்கும் அது மட்டும் அல்லாமல் நீண்ட ஆயுளையும் முருகப்பெருமான் உங்களுக்கு கொடுப்பார் மற்றும் நல்ல வாழ்க்கை துணைவியை கொடுப்பதற்கு முருகப்பெருமானை விட்டால் இந்த உலகத்தில் வேறு யாரும் இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். நல்ல மனமுள்ள குழந்தைகளை கொடுப்பதற்கு முருகப்பெருமான் தான் மிக சிறந்த கடவுளாக என்றும் பார்க்கப்படுகிறது.