தமிழ் கடவுள் முருகப்பெருமான் கண்டிப்பாக ஒவ்வொருவருக்கும் மிகவும் பிடித்த கடவுள் அதுமட்டுமல்லாமல் பல நன்மைகளை செய்யக்கூடிய கடவுளாக இன்றும் தமிழகத்தில் தமிழ்நாட்டு மக்கள் மனதில் தமிழர்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் முருகப்பெருமான் அந்த வகையில் முருகப்பெருமானை கார்த்திகை மாதத்தில் நெய் தீபம் ஏற்றுவது போல எலுமிச்சை தீபம் ஏற்று வழிபட்டால் சகல நன்மைகளும் கிடைக்கிறது என்ன என்பதை ஒன்றின் பின் ஒன்றாக நாம் தெரிந்து கொள்ளலாம்.
முருகரைத் தூக்கி வளர்த்த கார்த்திகை பெண்களை கொண்டாடும் விதமாக கார்த்திகை தீபம் வருகிறது அந்த கார்த்திகை தீபம் என்று நாம் முருகரை மனதார வேண்டி எலுமிச்சை பழத்தால் தீபம் ஏற்றும் பொழுது பலவகை நன்மைகளை நமக்கு நம்முடைய குடும்பத்திற்கும் கிடைக்கிறது அது என்ன என்பதை வாருங்கள் பார்க்கலாம்.
முருகனுக்கு எலுமிச்சை தீப வழிபாடு :-
★ கார்த்திகையில் ஒவ்வொருவரும் எலுமிச்சை பழத்தால் தீபம் ஏற்றி வழிபட்டால் கடன் தொல்லையில் இருந்து மீண்டு வர முடியும்
★ கார்த்திகை மாதத்தில் எலுமிச்சைப்பழ தீபம் ஏற்றுவதால் வீட்டில் சுபிட்சமான நிகழ்வுகள் நடக்கும்.
★ வாழ்க்கையில் பல தடைகள் அனைத்தும் விலக வேண்டும் என்றால் கார்த்திகை மாதத்தில் முருகப்பெருமானுக்கு எலுமிச்சை பழ தீபம் ஏற்ற வேண்டும்.