முகம் பொலிவு பெற என்ன செய்யவேண்டும்.?
முதலில் ஒரு கிவி பழத்தை எடுத்துக்கொண்டு அந்த கிவி பழத்தை இரண்டாக வெட்டி அதனில் ஒரு பாதியை எடுத்துக்கொள்ள வேண்டும்.
பிறகு அதை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்துக்கொள்ளவேண்டும், பிறகு அதனை முகம் மற்றும் கழுத்தில் முழுவதும் நன்கு தடவ வேண்டும்.
தடவியதும் அதை 30 நிமிடம் நன்கு ஊறவிடவும், பிறகு வெதுவெதுப்பான நீரால் உங்கள் முகத்தைக் கழுவ வேண்டும்.
இறுதியில் முகத்தை காட்டன் துணியால் துடைத்து பிறகு மாய்ஸ்சுரைசர் கிரீம் ஏதேனும் இருந்தால் அதை முகத்தில் பயன்படுத்த வேண்டும்.