முகம் பளபளப்பாக மின்னுவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் எளிமையான வீட்டு முறை மருத்துவம் | What we should do to make the face glow is a simple home remedy :-
ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி முகம் பளபளப்பாக இருக்க வேண்டும் என்று ஆசை எண்ணம் இந்த உலகத்தில் இருக்கக்கூடிய அத்தனை பேருக்கும் இருக்கக்கூடிய ஒரு விஷயம் தான். நான் அதிகமாக வெயிலில் சுற்றுகிறேன் அதனால் என் முகம் கருப்பாகிவிட்டன. என் முகம் பளபளப்பாக மாற வேண்டும் என்றால் நான் என்ன செய்ய வேண்டும், என்று கேட்க கூடிய அத்தனை பேருக்கும் இந்த பதிவு சமர்ப்பணம். முகம் பளபளப்பாக மின்ன எளிமையான வீட்டு வைத்தியத்தை பார்க்கப் போகின்றோம்.
மூலப்பொருள்
கசகசாவை ஏறுமைத் தயிரில் அரைத்து தினசரி இரவு தடவி வந்தால் முகம் பளபளப்பாக மாறும்.
விளக்கம்
எதுவாக இருந்தாலும் இயற்கையான முறையில் நாம் செய்வதால் கண்டிப்பாக நமக்கு நல்ல பலனை கொடுக்கும், என்ன கொஞ்ச காலம் தாமதமாகும் ஆனால் அதனால் நமக்கு கிடைக்கக்கூடிய பலன் நீண்ட நாட்கள் இருக்கக் கூடியதாக இருக்கும். உங்கள் முகம் பளபளக்க எவ்வளவு கருமையாக இருந்தாலும் உங்கள் முகம் பளபளக்க இதை நீங்கள் கண்டிப்பாக வீட்டில் செய்து பாருங்கள் உங்களுக்கு ஒரு நல்ல மாற்றத்தை கொடுக்கும். எருமத்தயிர் உங்கள் வீட்டுக்கு அருகாமையில் யாராவது எருமை வளர்த்துக் கொண்டிருந்தால் அதை அவர்களிடம் கேட்டு தயிரை வாங்கிக் கொள்ளுங்கள் அல்லது பால் வாங்கிக் கொண்டு வந்து தயிர் தோய வைத்து அதில் இருந்து பிரித்து எடுத்துக் கொள்ளுங்கள். அதை கசகசா ஓடு சேர்த்து அரைத்து தினமும் இரவு தூங்குவதற்கு முன் உங்கள் முகத்தில் பூசிக்கொள்ள வேண்டும் காலையில் எழுந்து குளிர்ந்த நீரில் கழுவுவதன் மூலமாக ஒரு நல்ல மாற்றத்தை உங்களால் காண முடியும்.