முகத்தை பளபளப்பாக மாற்றும் கேரட் ஆயில் நன்மைகள் / Carrot Oil benefits in Tamil and how to make Carrot oil in face pack

முகத்தைப் பளபளப்பாக மாற்றக்கூடிய கேரட் ஆயிலின் நன்மைகள் மற்றும் கேரட் ஆயில் எப்படி தயாரிப்பது என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்

கேரட் ஆயில் விட்டமின் சி அதிகம் நிறைந்த ஒரு பொருள் இந்த விட்டமின் சி முகத்திற்கு போடும்போது நம்முடைய சருமம் பொலி பொழிவாக மாறுகிறது இதனால் பார்ப்பதற்கு முகம் பேசியல் பண்ணது போல பளபளப்பாகவும் கலரை கூட்டக்கூடிய தன்மையும் நமக்கு அதிக அளவு இந்த கேரட் ஆயில் கொடுக்கிறது.
கேரட் ஆயிலின் நன்மைகள்

 

கேரட் ஆயில் தினமும் இரவு தூங்கும் போது இரண்டு சொட்டு உங்களுடைய முகத்தில் தடவி மசாஜ் செய்து காலையில் முகத்தை கழுவினால் உங்கள் முகம் ஏழு நாட்களில் வெண்மையாக மாறுவதையும் பொலிவுடன் தெரிவதையும் உங்களால் உணர முடியும்.
இந்தக் கேரட் ஆயில் பல கம்பெனிகள் அதிகப்படியான விலை உயர்ந்த விலையில் விற்று வருகிறார்கள் இதை எளிமையாக நாம் வீட்டிலேயே தயார் செய்யலாம் அது எப்படி என்பதை தான் இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம்
கேரட் ஆயில் தயாரிப்பது எப்படி

 

முதலில் இரண்டு கேரட்டை எடுத்துக்கொண்டு நன்கு கழுவி அதை துருவ வேண்டும் துருவிய கேரக்டை வெயிலில் நன்கு காய வைக்க வேண்டும் மற்றும் காயவைத்த கேரட்டை ஒரு கண்ணாடி டப்பாவில் போட வேண்டும் காய்ந்த கேரட் இருக்கும் அளவிற்கு நாம் தலைக்கு தடவ கூடிய தேங்காய் எண்ணெயை ஊற்றி நன்கு இரண்டு நாட்கள் ஊற வைத்தால் தேங்காய் எண்ணெயின் கலர் மாறி கோல்ட் கலராக அந்த எண்ணெய் மாறி இருக்கும் மற்றும் அதன் பிறகு அதில் இருக்கக்கூடிய கேரட்டின் தொக்கை நன்கு வடிகட்டி எண்ணெயை மட்டும் தனியாக கைப்படாமல் பிரித்துக் கொண்டு தினமும் இரண்டு ஸ்பூன் இரண்டு சொட்டுக்கள் உங்கள் முகத்திற்கு விட்டு மசாஜ் செய்து இரவு நேரத்தில் தூங்கி வந்தால் உங்கள் முகம் எண்ணி ஏழு நாட்களில் பளபளப்பாக மாறும்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top