மிதுனம் லக்னம் பலன்கள் – mithunam lagnam palangal

மிதுன லக்னத்தில் பிறந்தவர் எப்போதும் புன்சிரிப்பு தவழும் முகத்துடன் இருப்பார். எல்லோரிடமும் இனிய வசனங்களே பேசுவார். மங்கையர்களை அதிகமாக விரும்பவார். அவர்கள் மூலம் அடையும் இன்பத்தைப் பெரிதும் விரும்புவார். இவருக்கு கற்பனா சக்தியும், கணிதத்தில் வல்லமையும் உண்டு. பெண்கள் இவரைப் பார்த்து ரசிக்கும் தன்மையுடன் இருப்பார்.
மிதுன லக்னத்திற்கு குரு, செவ்வாய், சூரியன் மூவரும் கெட்டவர்கள். குருவுடன் சனி சேர்ந்தால் யோககாரனாவான். சந்திரன் தோஷமுடையவன். எனினும் மாரக மாரகனாக மாட்டான். குரு, செவ்வாய், சூரியன் மாரக ஸ்தானத்திலிருந்தால் மாரகத்திற்கு சமமான கண்டத்தைக் கொடுப்பார்கள். எதற்கும் இவர்களுடைய வலுவை அறிந்து எதையும் சொல்ல வேண்டும்.











