மாவிளக்கு தீபம் முக்கியமான நாட்களில் ஏற்றுவதால் என்ன பலன்கள் நமக்கு கிடைக்கின்றன அப்படி இல்லை என்றால் கோவில்களில் முக்கியமான சில தினங்களில் நாம் மாவிளக்கு தீபம் ஏற்றி வழிபாடு செய்வதால் நமக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கப் போகிறது என்பதை பற்றி பார்க்கலாம் கண்டிப்பாக நல்ல பலன் தெரிந்தவர்கள் நல்ல சாங்கியம் சபரிதாயம் தெரிந்தவர்கள் கண்டிப்பாக மாவிளக்கு தீபம் ஏற்று வழிபடுவார்கள் அதற்கு காரணம் பல பேருக்கு தெரியாது. அதனுடைய நன்மைகள் பல பேருக்கு தெரியாது இந்த பதிவில் அதனுடைய நன்மைகள் என்னென்ன என்பதை பற்றி தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
மாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் நன்மைகள்
★ மாவிளக்கு தீபம் ஏற்றி வழிபாடு செய்வது லட்சுமி கடாட்சத்தை உண்டு பண்ணி உங்கள் குடும்பத்தில் செல்வத்தை பெருக்கும்.
★ குடும்பத்தில் நீண்ட நாட்களாக தடைப்பட்டு இருக்கும் சுப காரியங்கள் மங்கள நிகழ்வுகள் திருமண தடை இப்படி எது இருந்தாலும் நிவர்த்தியாகி மங்கல செய்திகள் வந்து சேரக்கூடிய தன்மையை இந்த மாவிளக்கு தீபம் உண்டு செய்யும்.
★ குடும்பத்தில் செல்வம் பெருகுவதற்கும் தொழிலில் செல்வம் கிடைப்பதற்கும் இந்த மாவிளக்கு தீபம் உதவுகிறது
★ சுபபோக வாழ்வு பெறுவதற்கு மாவிளக்கு தீபம் ஏற்று வழிபாடு செய்வது சிறப்பு.