மாத சிவராத்திரி இன்று நாம் செய்யவேண்டிய முக்கியமான விஷயத்தை பார்க்கப்போகிறோம்.
தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று திகழக்கூடிய சிவபெருமானை நாம் வணங்குவது மூலமாகவே நம் குடும்பத்தில் இருக்கக்கூடிய அத்தனை கஷ்டங்களும் நீங்கி நல்ல காலம் நல்ல வழி பிறக்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை
இன்று அக்னி நட்சத்திரம் முடியும் நாள் மாதசிவராத்திரி இந்த நாள் மிகச் சிறப்பான நாளாக அமைந்துள்ளது. சிவபெருமானை வணங்காதவர்கள் கூட இன்று சிவபெருமானை வணங்குவதன் மூலம் சிவனின் உடைய ஆசி எளிதில் அவர்களுக்கு கிடைக்கும் என்பது ஐதீகம். தேய்பிறை பிரதோஷம் அடுத்தநாள் வரக்கூடிய மாதசிவராத்திரி மிகவும் சிறப்புமிக்க சிவராத்திரியாக கருதப்படுகிறது. இந்த நாள் நாம் அனைவரும் செய்ய வேண்டிய மிக முக்கியமான விசயத்தை தெளிவாக பார்க்க போகின்றோம்
செய்யவேண்டியவை:
இன்று மாத சிவராத்திரி மற்றும் அக்னி நட்சத்திரம் முடிவடையும் நாள். இந்த நாளன்று ஒவ்வொருவரும் சிவன் கோவிலுக்கு சென்று சிவனுக்கு முன்னாடி நெய்தீபம் ஏற்றி மனதார அவரை வேண்டுவதன் மூலமாக நாம் வேண்டிய அத்தனை விஷயங்களும் நிறைவேறும் என்பது உண்மை. எப்படி சிவனுக்கு முன்னாடி தீபம் எரிகிறதோ அது போல நம்முடைய வாழ்க்கையிலும் தீப ஒளி வீசும் என்பது ஐதீகம். அதனால் ஒவ்வொருவரும் மாத சிவராத்திரியின் போது மறக்காமல் சிவனுக்கு நெய்விளக்கு ஏற்றி வணங்க வேண்டும்.
நன்மைகள்:
1. குடும்பத்தில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் நீங்கும்
2. குடும்பத்தில் ஏற்படுகின்ற பில்லி சூனியம் ஏவல் அனைத்தும் ஓடி ஒளியும்
3. குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் சீக்கிரமாக அமையும்
4. தொழில் விருத்தி அடையும்
5. குல தெய்வ குற்றம் இருந்தால் நீங்கும்
கோவிலுக்கு போகமுடியதவர்கள்:
உங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கக்கூடிய சிவன் கோவிலுக்கு போக முடியவில்லை என்றால் பிரச்சனை ஒன்றுமில்லை. உங்கள் பூஜை அறையில் சிவபெருமானின் உருவ படம் இருந்தால் அதை வைத்து விட்டு அதற்கு முன்பாக விளக்கு ஏற்ற வேண்டும் குறிப்பாக சிவ படத்திற்கு பூ அணிவித்து மஞ்சள் குங்குமம் இட்டு பிறகு நெய் விளக்கு ஏற்ற வேண்டும். அப்படி உங்கள் வீட்டில் சிவபெருமானின் புகைப்படம் இல்லை என்றால் ஒன்றும் பிரச்சினையில்லை சிவனை மனதார நினைத்து உங்கள் பூஜையறையில் இருக்கக்கூடிய இஷ்ட தெய்வத்திற்கு முன்பாக நெய்விளக்கு ஏற்றி மனதிற்குள் ஓம் நமசிவாய என்ற மந்திரத்தை நூறு முறை சொல்லி சிவனை அழைப்பதன் மூலமாக சிவன் உங்களுடைய அத்தனை கஷ்டங்களையும் மன வேதனைகளையும் போக்கி உங்களுக்கு நல்ல வழிகளையும் தொழில் விருத்தியையும் குடும்பத்தில் பிரச்சினை இல்லாமல் செய்வது மற்றும் தொழில் வளர்ச்சி அடைதல் போன்ற அத்தனை பிரச்சினைகளுக்கும் ஒரு தீர்வாக சிவபெருமான் நமக்கு காட்சியளிப்பார்.