பெண்களுக்கு முகத்தில் முடி அதிக அளவு இருக்கிறது என்ன செய்வது.? முகத்தில் உள்ள முடிகளை நீக்குவது எப்படி.!
இன்றும் சில பெண்களுக்கு முகத்தில் முடி அதிகமாக இருந்து கொண்டிருக்கிறது நான் பியூட்டி பார்லர் போக மாட்டேன் என்று சொல்லக்கூடிய பெண்கள் வீட்டிலிருந்து எளிமையான முறையில் முகத்தில் இருக்கக்கூடிய முடிகளை நீக்குவது எப்படி என்பதை பற்றி தான் இந்த பதிவில் நாம் பார்க்க போகின்றோம்
இதனை தற்போது ரசாயனப் பூச்சு முறையாலும், மின்சார உபகிரணங்களைக் கொண்டும் அழகு நிலையத்தில் நீக்குகிறார்கள். இதனால் அதிகமான பணம் செலவழிக்க வேண்டும். மேலும் பக்க விளைவுகள் ஏற்படுகிறது. அடிக்கடி போய் இதனை நீக்க வேண்டிய சூழ்நிலையும் உள்ளது.
இதனை மிக எளிய முறையில் நம் நாட்டு மருந்துகளை பயன்படுத்தி நன்மையடையலாம். நாட்டு மருந்து கடைகளில் மரமஞ்சள் என்று கேட்டு வாங்கி, அதை நன்கு பொடியாக்கி, பாலில் கலந்து இரவில் முகத்தில் பூசி மறுநாள் காலை குளிர்ந்த தண்ணீரில் கழுவ வேண்டும். அதன்பின்பு பாலாடை அல்லது பால்க்ரீம் தடவி, பின்பு குளித்து விடலாம். இவ்வாறு செய்து வந்தால், முடிகள் கொட்டி விடும். முகமும்