பெண்களுக்கு ஏற்படுகின்ற வயிற்று வலி குணமாக என்ன மருந்தை எடுத்துக் கொள்ள வேண்டும்
பெண்கள் சரியாக உணவு உட்கொள்ளாத காரணத்தினால் அல்லது காரங்கள் மசாலா பொருட்கள் அதிகமாக உணவில் கலந்து எடுத்துக் கொள்வதால் அப்படி இல்லை என்றால் ஒரு சில காரணங்களால் வயிற்று வலி ஏற்படும் அவ்வகையான வயிற்று வலியை வீட்டில் இருக்கக்கூடிய ஒரு சில பொருட்களை வைத்து மருந்தாக தயாரித்து பெண்கள் தங்களுடைய வயிற்று வலியை குணப்படுத்த முடியும் அதைத்தான் இந்த பதிவில் நாம் பார்க்கப் போகின்றோம் வாருங்கள் வயிற்று வலியை குணப்படுத்த மருந்து எப்படி தயாரிப்பது என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
பெண்களுக்கு ஏற்படுகின்ற மாதவிடாய் காலங்களில் வயிற்று வலியை குணப்படுத்த கூட இது மிக முக்கிய அருமருந்தாக பார்க்கப்படுகிறது அதனால் பெண்கள் மாதவிடாய் காலங்களில் வயிற்று வலி ஏற்படும் போது என்ன செய்ய வேண்டும் என்று இனி என்ன வேண்டாம் இதை செய்து பாருங்கள் கண்டிப்பாக மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வயிற்று வலி முற்றிலும் குணமாகும்.
வயிற்று வலிக்கு மருந்து
திப்பிலி மற்றும் இந்து உப்பு மற்றும் பெருங்காயம் இவை மூன்றையும் நீங்கள் சம அளவில் முதலில் எடுத்துக்கொண்டு அதை ஒரு கடாயில் போட்டு இளவருவனாக அதை வறுத்தெடுக்க வேண்டும் பிறகு வறுத்தெடுத்த அந்த மூன்றையும் நன்கு பொடி செய்து கொள்ளவும் அதன் பிறகு காலையில் வெறும் வயிற்றில் மாதவிடாய் நாட்களில் உட்கொள்ள பெண்களுக்கு அப்போது ஏற்படும் வயிற்று வலி சிறிது நேரத்தில் குணமாகும்.