பூரம் நட்சத்திரம் குணங்கள் / Pooram Natchathiram Kunangal ( Character) in tamil

பூரம் நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள்
அழகான உடல் அமைப்பை உடையவர்கள்.
பயணங்கள் மேற்கொள்வதில் அதிக ஆர்வமும், ஆசையும் உடையவர்கள்.
சேமிப்பதில் அதிக கவனம் செலுத்தக்கூடியவர்கள்.
அசாத்தியமான தைரியத்துடன் செயல்படக்கூடியவர்கள்.
கீர்த்தியோடு வாழ வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள்.
பல கலைகளை கற்பதில் ஆர்வம் கொண்டவர்கள்.
தற்புகழ்ச்சியில் மயங்கக்கூடியவர்கள்.
இனிமையாக பேசுவதில் வல்லவர்கள்.
தோல்வியை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் குறைவு.
மற்றவர்களை சார்ந்து வாழக்கூடியவர்கள்.
சிலர் சுயநலமாக செயல்படக்கூடியவர்கள்.
அதீத நினைவாற்றல் கொண்டவர்கள்.
தர்மம் செய்வதில் விருப்பம் உடையவர்கள்,
உழைத்து முன்னேற வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள்.
அலைபாயும் மனநிலையை உடையவர்கள்.
ஆடம்பர செலவுகள் செய்வதில் வல்லவர்கள்.
பல நேரங்களில் கற்பனையில் இருக்கக்கூடியவர்கள்.
புத்திக்கூர்மையுடன் செயல்படக்கூடியவர்கள்.
தெய்வ நம்பிக்கை உடையவர்கள்.
திட்டமிட்டபடி செயல்படாதவர்கள்.
எவ்லோரையும் அனுசரித்து செல்லும் குணநலன்களை உடையவர்கள்.
நேர்த்தியான உடைகளை அணிவதில் விருப்பம் கொண்டவர்கள்.