புதன் தோஷம் நீக்க வழிபாடு செய்ய வேண்டிய கடவுள் யார் என்பதை பார்க்கப் போகிறோம். ஏனென்றால் புதன் பகவான் தான் செல்வத்தை கொடுக்கக் கூடியவர் புதன் பகவான் தான் கல்வியை கொடுக்கக் கூடியவர் அந்த விதத்தில் புதன் தோஷம் இருக்கக்கூடியவர்களுக்கு செல்வம் கல்வி இதில் எல்லாம் தடைகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது அதனால் புதன் தோஷம் நீக்குவதற்கு மற்றும் புதன் தோஷம் போக்கும் வழிபாடு என்ன என்பதை இந்த பதிவில் பார்க்க போகின்றோம் வாருங்கள் சுருக்கமாக தெரிந்து கொள்வோம்.
புதன் தோஷம் போக்கும் வழிபாடு
★ புதனால் ஒருவருக்கு திருமண தோஷம் ஏற்பட்டால் புதன்கிழமை தோறும் மகாவிஷ்ணுவை வழிபாடு செய்வது சிறப்பு.
★ புதன் தோஷம் நீக்க ஆல மரத்திற்கு ஒவ்வொரு புதன்கிழமையும் ஒரு குடம் தண்ணீர் எடுத்துக்கொண்டு மூன்று முறை ஆலமரத்தை சுற்றி வந்து அந்த ஆலமரத்திற்கு நீங்கள் ஊற்றுவதால் புதன் தோஷம் நீங்கும்.
★ விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் செய்வது மிகவும் சிறப்பு வாய்ந்தது.
★ புதன்கிழமையில் விரதம் இருந்து நீங்கள் பெருமாளை வழிபாடு செய்வதன் மூலமாக புதன் தோஷத்தின் உடைய தாக்கங்கள் குறைக்கப்படுகிறது.