குழந்தைக்கு பெயர் வைப்பது எப்படி ஜோதிடம் மற்றும் ஜாதகம் முறைப்படி.? How to Choice Best Baby Name for Jothidam and Jathakam.?
பொதுவாக இன்றைய காலகட்டத்தில் பெயர் வைப்பது என்பது மிக முக்கியமான ஒரு விஷயமாக பார்க்கப்படுகிறது. காரணம் என்னவென்றால் ஒரு குழந்தைக்கு பெயர் என்பது மிக முக்கியமான ஒரு அடையாளம். அந்த அடையாளம் அதிர்ஷ்டமாக இருக்க வேண்டும், அந்த குழந்தைக்கு செல்வத்தையும், பேர், புகழ், அந்தஸ்தையும் அந்த குழந்தை வளரும் காலத்தில் கிடைக்கும் வண்ணம் அதிர்ஷ்டம் நிறைந்த பெயராக வைக்க வேண்டியது ஒவ்வொரு பெற்றோர்களின் உடைய கடமையாக நாம் இன்றையநாள் பார்க்கப்படுகிறது.
குழந்தைக்கு பெயர் வைப்பது எப்படி:
உங்கள் குழந்தை பிறந்த தேதி மற்றும் பிறந்த நேரம் அதன் பிறகு பிறந்த ஊர் இந்த மூன்றையும் அடிப்படையாகக் கொண்டு ஜாதகத்தை கணிக்க வேண்டும். அது எப்படி ஜாதகம் கணிப்பது என்றால். பிறந்த தேதி, பிறந்த நேரம், பிறந்த ஊர், இந்த மூன்றையும் மறக்காமல் ஒரு காகிதத்தில் எழுதிக் கொண்டு அதை கொண்டு போய் உங்கள் வீட்டுக்கு அருகாமையில் இருக்கக்கூடிய ஒரு சில கம்ப்யூட்டர் சென்டர்களில் ஜாதகம் கணிக்க கூடிய சாஃப்ட்வேர் இருக்கிறது, அவர்களிடம் சொன்னால் அவர்கள் உங்களுடைய ஜாதகத்தை எடுத்துக் கொடுப்பார்கள். இன்றைய காலகட்டத்தில் அதிகமாக அதையே நம்பப்படுகிறது. அப்படி இல்லை என்றால் உங்கள் வீட்டுக்கு அருகாமையிலோ உங்களுக்குத் தெரிந்த நம்பிக்கைகூறிய சரியாக கணிக்க கூடிய ஜோதிடர் யாராவது இருந்தா அவர்களிடம் இந்த மூன்றையும் கொடுத்து ஜாதகத்தை ரெடி பண்ணி தர சொல்ல வேண்டும்.
ஜாதகம் ரெடியான பிறகு அந்த ஜாதகத்தில் சொல்லப்பட்டு இருக்கக்கூடிய ராசி மற்றும் நட்சத்திரம் மிக மிக முக்கியம். இந்த இரண்டையும் அடிப்படையாகக் கொண்டு எந்த எழுத்தில் தொடங்க வேண்டும் என்பதை முடிவு செய்யப்படுகிறது.
உங்களுடைய குழந்தையின் ஜாதகத்தில் நட்சத்திரம், ராசி, அடிப்படையில் முதல் எழுத்து எது தொடங்கினால் நன்றாக இருக்கும் என்று முடிவு செய்த பிறகு, அந்த எழுத்தை அடிப்படையாகக் கொண்டு நீங்கள் உங்கள் குழந்தைக்கு பெயர் வைத்தால் நிச்சயமாக உங்கள் குழந்தை பெயர், புகழ், அந்தஸ்து, நிறைந்த ஒரு குழந்தையாக வருங்காலத்தில் வளரும் என்பது உண்மை. இன்று ஊருக்குள் இருக்கக்கூடிய மிகப்பெரிய செல்வந்தர்கள் அத்தனை பேரும் இதன் அடிப்படையிலேயே தன்னுடைய குழந்தைகளுக்கு பெயர் வைக்கின்றனர். இது மிக முக்கியமான ஒரு விஷயமாகும்.
ஜாதக அடிப்படையில் உங்கள் குழந்தைக்கு முதல் எழுத்தில் பெயர் தொடங்க வேண்டும் என்று கண்டுபிடித்த பிறகு, நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்றால் எண் கணிதம் பிரகாரம் அந்தப் பெயர் இருக்கிறதா என்பதை நீங்கள் தவறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். எண் கணிதத்தின் பிரகாரம் அந்த குழந்தையின் பெயர் வந்தால் இன்னும் அந்த குழந்தையின் வளர்ச்சி யாராலும் தடுக்க முடியாத அளவிற்கு இருக்கும். அதனால் உங்கள் குழந்தைக்கு ராசி நட்சத்திரத்தின் அடிப்படையில் முதல் எழுத்து கண்டுபிடித்த பிறகு, நீங்கள் அந்த முதல் எழுத்தில் இருக்கக்கூடிய பெயர்களை தயார் செய்த பிறகு, அந்த பெயர்கள் எண் கணிதத்தின் பிரகாரம் இருக்கிறதா என்பதையும் நீங்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
இவ்வளவுதான் உங்கள் குழந்தைக்கு நீங்கள் பெயர் வைப்பதற்கான முறை. இதை ஒரு ஜோதிடர் இடமும் போய் நீங்கள் தெரிந்து கொள்ளலாம் அல்லது இப்போது சமூக வலைத்தளங்களில் ஏராளமாக கொட்டி கிடக்கிறது அதன் மூலமாகவும் உங்களுடைய சந்தேகங்களை நீங்கள் நிவர்த்தி செய்து கொள்ளலாம். உங்கள் ஜோதிடர் சொன்ன விஷயம் சமூக வலைத்தளங்களில் பல ஜோதிடர்கள் சொன்ன விஷயங்களும், பல சமூக வலைத்தளங்களில் படித்து தெரிந்து கொண்ட விஷயங்களும் சரியாக இருக்கிறதா என்ற ஒரு விஷயத்தை நீங்கள் பூர்த்தி செய்து கொள்ளலாம்.