திருமண வாழ்க்கை என்பது எவ்வளவு முக்கியமோ அதே மாதிரி குழந்தை பிறப்பதும் மிக மிக முக்கியம் அப்படி குழந்தை பிறக்கும் தருணத்தில் நாம் என்ன செய்ய வேண்டும் குழந்தைகளுக்கு பெயர் வைக்க வேண்டும் என்றால் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி எல்லாம் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
திருமணம் ஆனால் மட்டும் போகாது திருமணத்திற்கு பிறகு குழந்தைக்கு பெயர் வைப்பது முதல் திருமணம் செய்து கொடுப்பது வரை ஒவ்வொரு நிகழ்வுகளையும் ஜாதகரீதியாக ஜோதிடம் ரீதியாக தெரிந்து கொள்ள வேண்டியது மிக மிக அவசியம் அந்த வகையில் குழந்தைக்கு பெயர் வைப்பது எப்படி பிறந்த குழந்தைக்கு ஜாதகத்தை கணிப்பது எப்படி என்பதை பற்றி கண்டிப்பாக நாம் தெரிந்து கொள்வது மிக மிக முக்கியம்.
குழந்தைக்கு ஜாதகம் கணிப்பது எப்படி
குழந்தைக்கு ஜாதகம் கணிப்பது எப்படி என்பதை பற்றி நாம் பார்ப்பதற்கு முன் ஜாதகத்தைப் பற்றியும் ஜோதிடத்தை பற்றியும் நமக்கு தெரிந்தால் மட்டுமே நம்மால் சுயமான ஜாதகத்தை கணிக்க முடியும் நமக்கு ஒரு வேலை ஜாதகத்தைப் பற்றி தெரியாது அல்லது ஜோதிடத்தைப் பற்றி தெரியாது என்றால் நிச்சயமாக நாம் ஜோதிடரை அணுகி அவர்களிடம் மட்டுமே ஜாதகத்தை கணிப்பது நல்லது.
அப்படி இல்லை என்றால் பிறந்த குழந்தைக்கு ஜாதகம் கணிப்பதற்கு இன்னொரு எளிமையான வழி இருக்கிறது என்னவென்றால் இப்போது அஸ்ட்ரோ சாஃப்ட்வேர் என்று பல விஷயங்கள் வந்துவிட்டன டெக்னாலஜி சம்பந்தமாக ஒரு கம்ப்யூட்டர் சென்டருக்கு நீங்கள் போய் உங்களுடைய குழந்தையினுடைய விவரங்களைச் சொல்லும் போது அவர்கள் ஜாதகத்தை கணித்து உங்களுக்கு பிரிண்ட் அவுட் ஆக தருகிறார்கள் அதன் மூலமாக கூட நீங்கள் உங்கள் குழந்தையின் உடைய ஜாதகத்தை எடுத்துக் கொள்ள முடியும்.
பிறந்த குழந்தைக்கு ஒரு பெற்றோர்களால் ஜோதிடம் தெரியாத நிலையில் ஜாதகத்தை கணிக்க முடியாது ஒன்று கம்ப்யூட்டர் சென்டரில் அதற்கென்று தனியாக சாஃப்ட்வேர் இருக்கிறது அதன் மூலமாக நாம் ஜாதகத்தை எடுத்துக் கொள்ளலாம் அல்லது ஜோதிடரிடம் அணுகி அவர்களிடம் நாம் ஜாதகத்தை ரெடி பண்ணித் தரும்படி கேட்டு அவர்களிடம் இருந்து வாங்கிக் கொள்ளலாம் இது மட்டுமே வழி.
பிறந்த குழந்தைக்கு ஜாதகம் கணிக்க என்னென்ன முக்கியமான விஷயங்கள் தேவை.
பிறந்த குழந்தை ஜாதகம் கணிக்க வேண்டும் என்றால் கண்டிப்பாக உங்கள் மனைவி பிரசவ நேரத்தில் அங்கு இருக்கக்கூடிய மருத்துவர்கள் இடமோ அல்லது செவிலியர்களிடமோ நீங்கள் சொல்லி வைக்க வேண்டும் என்னவென்றால் குழந்தை பிறக்கும் நேரம் சரியாக எனக்கு கொடுங்கள் என்று அவர்களிடம் பணம் கொடுத்தால் கரெக்டா செய்வார்கள் வேலை அதன் மூலமாக நீங்கள் குழந்தை பிறக்கும் நேரத்தை சரியாக குறித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறந்த குழந்தைக்கு ஜாதகம் கணிக்க வேண்டும் என்றால் சரியான தேதி குறித்து வைத்துக் கொள்ள வேண்டும் மற்றும் எந்த நேரத்தில் பிறந்தது அந்த குழந்தை என்பதையும் சரியாகக் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும் மூன்றாவதாக எந்த ஊரில் அந்த குழந்தை பிறந்தது என்பதையும் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
இந்த மூன்றையும் அடிப்படையாகக் கொண்டுதான் ஒரு பிறந்த குழந்தைக்கு ஜாதகத்தை உருவாக்க முடியும்.
பிறந்த குழந்தையின் நேரம் மற்றும் பிறந்த குழந்தையின் ஊர் மற்றும் பிறந்த குழந்தையினுடைய தேதி இந்த மூன்றையும் அடிப்படையாகக் கொண்டு நீங்கள் ஜாதகம் உருவாக்க வேண்டும் உருவாக்கிய ஜாதகத்தில் உங்கள் குழந்தை எந்த நட்சத்திரத்தில் பிறந்துள்ளது என்பதை நீங்கள் பார்க்க வேண்டும்.
எந்த நட்சத்திரத்தில் குழந்தை பிறந்திருக்கிறது என்பதை வைத்து அந்த நட்சத்திரத்திற்கு பொருத்தமான முதல் எழுத்து என்ன என்பதை நீங்கள் கண்டுபிடித்து அதிலிருந்து உங்களுக்கு பிடித்த பெயரை நீங்கள் உங்கள் குழந்தைக்கு வைக்கலாம்.