பிறந்த குழந்தைக்கு பெயர் வைப்பது எப்படி :-
பிறந்த குழந்தைக்கு சிறப்பான முறையில் பெயர் வைப்பது எப்படி என்பதை பற்றி தான் பார்க்கப் போகின்றோம்.
குழந்தை என்பதே இன்றைய காலகட்டத்தில் மிகப்பெரிய வரமாக பார்க்கப்படுகிறது முந்தைய காலகட்டத்தில் நம்முடைய தாத்தா பாட்டிகள் 10 குழந்தைகள் 5 குழந்தைகள் என்று பெற்று பேர் வைத்து வளர்த்தார்கள் ஆனால் இன்றைய காலகட்டத்தில் ஒரு குழந்தைக்கு வழியில்லாத நிலைமைக்கு நம்முடைய உணவுகளும் பழக்க வழக்கங்களும் தள்ளிவிட்டன.
அந்த வகையில் நம்முடைய பிறந்த குழந்தைக்கு நாம் எப்படி பெயர் வைக்க வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் பொதுவாக தெரிந்து கொள்வோம்.
உங்களுடைய குழந்தை பிறக்கப் போகிறது என்றால் சரியான நேரத்தை கணிக்க வேண்டும் அதாவது குழந்தை எப்போது இந்த உலகத்திற்கு தாயின் வயிற்றில் இருந்து வெளியே வருகிறது என்ற நேரத்தை அங்கு இருக்கக்கூடிய செவிலியர்கள் சொல்லி குறித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
இந்த பிறந்த நேரத்தை வைத்து ஜாதகத்தை ரெடி பண்ண வேண்டும் அதாவது பிறந்த நேரம் பிறந்த ஊர் மற்றும் பிறந்த தேதி இந்த மூன்றையும் வைத்து ஜாதகத்தை தயார் செய்ய வேண்டும்
தயார் செய்யப்பட்ட ஜாதகம் எந்த நட்சத்திரத்தை கொண்ட ஜாதகம் என்பதை பொறுத்து அந்த நட்சத்திரத்திற்கு உரிய எழுத்து மூலமாக தொடங்கக்கூடிய பெயரை வைத்தால் அந்த குழந்தைக்கு சிறப்பாக இருக்கும்.
குழந்தைக்கு பெயர் வைப்பது இப்படிதான் எளிமையான முறையில் நீங்களும் கற்றுக் கொள்ளலாம்