பிறந்த குழந்தைக்கு ஜாதகம் கணிப்பது எப்படி
பிறந்த குழந்தைக்கு ஜாதகம் கணிப்பது என்பது மிக மிக முக்கியமான விஷயம் ஏனென்றால் ஒரு குழந்தை இந்த உலகத்தில் பிறக்கும் போது அந்த குழந்தையினுடைய வளர்ச்சி மற்றும் அந்த குழந்தையினால் குடும்பத்தினுடைய வளர்ச்சி எவ்வாறு இருக்கும் என்பதை அறிந்து கொள்வதற்கு ஒரு குழந்தையினுடைய ஜாதகம் மிக மிக முக்கியம் இன்று இந்த உலகத்தில் பிறக்கக்கூடிய ஒவ்வொரு குழந்தைகளுக்கும் ஜாதக ரீதியாகத்தான் பெயர் வைக்கிறார்கள், ஜாதகரீதியாக தான் படிக்கக்கூட வைக்கிறார்கள் என்பதுதான் உண்மை. இன்னும் சொல்ல போக வேண்டும் என்றால் ஒரு குழந்தை ஜாதக ரீதியாக எந்த நேரத்தில் பிறக்க வேண்டும் என்பதைக் கூட இன்று கணித்துக் குழந்தை பிறக்கும் தருணத்திற்கு இந்த உலகம் தள்ளப்பட்டு விட்டது நடந்து கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை.
அந்த வகையில் பிறந்த குழந்தைக்கு ஜாதகம் கணிப்பது எப்படி என்றால் ஒரு குழந்தை இந்த மண்ணில் தாயினுடைய வயிற்றிலிருந்து வெளியே வரக்கூடிய நேரம் மிக மிக முக்கியம் ஒரு குழந்தை எந்த நேரத்தில் பிறந்தது மற்றும் எந்த ஊரில் பிறந்தது மற்றும் எந்த தேதியில் பிறந்தது இது மூன்றும் தான் ஒரு குழந்தைக்கு ஜாதகம் கணிப்பதற்கு மிக மிக முக்கியமான ஒரு விஷயமாக பார்க்கப்படுகிறது அந்த வகையில் இந்த மூன்றையும் அடிப்படையாகக் கொண்டு ஒரு குழந்தைக்கு ஜாதகம் வரையப்படுகிறது.
உங்கள் வீட்டுக் கருகமையோ அல்லது உங்களுக்கு தெரிந்தவர்களோ அல்லது உங்களுடைய குழந்தையோ பிறக்கப் போகிறது என்றால் கண்டிப்பாக மேலே சொல்லப்பட்ட அந்த மூன்று விஷயங்களை கவனமாக குறித்து வைத்துக் கொள்ளுங்கள் அதன் அடிப்படையில் தான் குழந்தைக்கு ஜாதகம் கணிக்கப்படும்.