ஒரு மனிதன் உயிர் வாழ்வதற்கு மிக முக்கியம் பணம் அப்படிப்பட்ட பணத்தை எவ்வளவு தான் உழைத்தாலும். ஒருவர் சேமித்து வைக்க வேண்டுமென்று நினைத்தாலும் அவர்கள் கையில் பணம் நிற்காது காரணம் லட்சுமி அவர்களிடம் வரமாட்டாள். இதற்குக் காரணம் அவர்கள் செய்யக்கூடிய சின்ன சின்ன தவறுகள்
சிலர் என்னதான் கஷ்டப்பட்டு உழைத்தாலும் சேமிப்பு என்பது அவர்களிடம் இருக்காது . காரணம் பணத்தை சேர்த்து வைக்க லட்சுமியை விட்டுவிடுவார்கள். இன்று லக்ஷ்மியை தன்னிடம் தக்க வைத்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி தான் பார்க்கப் போகின்றோம்
செய்ய வேண்டியவை
1. நீங்கள் சம்பாதித்த பணத்தை அதாவது நீங்கள் உழைத்த பணம் உங்களிடம் வரும்போது அந்த பணத்தை உடனடியாக செலவு செய்து விடக்கூடாது
2. உங்களிடம் வரக்கூடிய பணத்தை நீங்கள் பணம் சேமித்து வைக்கக்கூடிய இடமாக இருக்கக்கூடிய பீரோ பெட்டி இப்படி ஏதோ ஒரு இடம் இருக்கும் அல்லவா அந்த இடத்தில் வைத்துவிட வேண்டும்
3. பணம் வைக்கும் பெட்டியை எப்போதும் காலியாக வைக்கக்கூடாது சுத்தமாகத் துடைத்து அதில் இருக்கக்கூடிய பணத்தை எடுக்கக்கூடாது
4. செவ்வாய் கிழமைகளில் வெள்ளிக்கிழமைகளில் யாருக்கும் பணம் இருக்கும் பெட்டியிலிருந்து எடுத்து கொடுக்ககூடாது தானம் செய்யக்கூடாது