நீல கலர்கள் யார் அணிய வேண்டும்.? நீல கலர் கல் அணிவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன.!
நீல கலர்கள் யார் அணிய வேண்டும்
முதலில் நீல கலர்கள் எந்த கடவுளுக்கு உரித்தான கல் என்பதை கண்டிப்பாக ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டும் இந்த நீல கலர் கல் சனீஸ்வரனுக்கு உகந்த கல் சனீஸ்வரனின் உடைய அருளும் ஆசீர்வாதமும் பெற வேண்டும் என்றால் இந்த நீல கலர் கல் மிகவும் உறுதுணையாக இருக்கின்றன அந்த வகையில் நீல கலர் கல்லை யார் அணிய வேண்டும் என்று உங்கள் கேள்விகள் எழலாம் அதற்கு மிக முக்கியமான ஒரு பதில் நீல கலர் கல்லை யார் வேண்டுமானாலும் அணிய முடியாது இதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும் ஏனென்றால் சனீஸ்வரன் என்னுடைய நேரடி தாக்கம் அதில் இருப்பதால் நீல கலர் கல்லை யார் வேண்டுமானாலும் அணிந்து விடலாம் என்று எண்ணம் இருக்கக் கூடாது.
நீல கலர் கல்லை யார் அணிய வேண்டும் என்றால் சனியினுடைய பார்வை யார் மீது விழுகிறதோ சனியினுடைய நட்சத்திரத்தில் யார் பிறந்திருக்கிறார்களோ அல்லது சனி திசை யாருக்கு நடக்கிறதோ அல்லது சனி புத்தி யாருக்கு நடக்கிறதோ அவரவர்களுடைய சுய ஜாதகத்தை பரிசீலனை செய்து அதன் பிறகு நீலர் கலர் கல்லை அணிவது சிறப்பானது.
நீல கலர் கல்லை எந்த விரலில் அணிய வேண்டும்
மிக முக்கியமான ஒரு கேள்வி நீல கலர் கல் அணிய வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால் எந்த விரலில் அணிந்தால் நமக்கு சிறப்பானது என்ற ஒரு சந்தேகம் உங்களுக்கு எழலாம் அதற்கான விடையையும் பார்த்து விடுவோம் முதலில் நீங்கள் நீல கலர் கல்லை அணிவதற்கு தகுதியானவர் என்பதை முடிவு செய்துவிட்டு நீல கலர் கல்லை எந்த விரலில் அணிய வேண்டும் என்றால் உங்களுடைய வலது கை நடுவிரலில் அணிவது சிறப்பானது ஏன்னா நடுவிரல் என்பது சனீஸ்வரனின் உடைய விரல் அவர் குடியிருக்க கூடிய விரல் என்று ஜாதகரீதியாக சொல்லப்படுகின்ற விஷயம் அதனால் நீல கலர் கல்லை நடு விரலில் அணிவது சிறப்பானது.
அதேபோல ஒரு சிலருக்கு மோதிர விரலில் நீல கலர் கல்லை அணிவதும் சிறப்பானது சரி நடுவிரலில் அணிவது சிறப்பா அல்லது மோதிர விரலில் நீல கலர் கல் அணிவது சிறப்பா என்ற சந்தேகம் உங்களுக்கு இருந்தால் அதற்கு ஒரே வழி உங்களுடைய சுய ஜாதகத்தை பார்த்து பிறகு தான் அதை சொல்ல முடியும் உங்கள் ராசி கட்டத்தில் எந்த அதிபதியோடு எந்த அதிபதி சேர்ந்தால் உங்களுக்கு நன்மைகளை கொடுக்குமோ அந்த விரலில் அணிவதுதான் உங்களுக்கு மிகவும் சிறப்பானது என்பதை எப்போது உங்களுக்கு தெளிவாக சொல்ல முடியும் என்றால் உங்களுடைய சுயசாதகத்தை அலசி பார்த்த பிறகு தான் சொல்ல முடியும்.
அதனால் நீங்கள் முடிந்தவரை உங்களுடைய ஜாதகத்தை ஒரு ஜோதிடரிடம் கேட்டு தெளிவாக தெரிந்து கொண்ட பிறகு நீல கலர் கல்லை வாங்குங்கள் அதன்பிறகு எந்த விரலில் அணிய வேண்டும் என்று கேட்டு அந்த விரலில் அணியுங்கள் அதுவே சிறப்பானது.
நீல கலர் கல்லை அணிவதால் கிடைக்கும் நன்மைகள்
நீல கலர்கள் சனீஸ்வரனின் உடைய கல் என்பது எல்லோருக்கும் தெரியும் இதனை அணிவதால் நமக்கு என்ன நன்மைகள் நடைபெறும் என்பதை வாருங்கள் பார்க்கலாம்
★ முதலில் சனீஸ்வரனின் உடைய தாக்கம் நம் மீது பலமாக இருந்தால் அதை குறைப்பதற்கு இந்த நீலக்கல் பெரிதும் உதவுகிறது
★ யாருக்கெல்லாம் சனி தசையோ சனிபுத்தியோ நடக்கும் போது நினைத்த காரியம் சரியாக நடக்கவில்லை தடைப்பட்டு கொண்டே இருக்கிறது என்ன செய்வது என்று புலம்பி கொண்டிருப்போர் இந்த நீலக்கல்லை அணிவதால் நீங்கள் எதிர்பார்த்த விஷயம் சுமூகமாக முடியும்.
★ நீல கலர் கல்லை அணிவதால் நேரடியாக சனியினுடைய பார்வை உங்கள் மீது விடும் அது தாக்கத்தை கொடுக்காத வகையில் உங்களுக்கு நல்ல மாற்றங்களை கொடுக்கும்
★ நீல கலர் கல்லை அணிவதால் உங்களுக்கு வேலை அமையும் அல்லது புதிதாக தொழில் தொடங்கக்கூடிய யோகங்கள் கிடைக்கும் அல்லது எதிர்பார்த்த தொழில் நீங்கள் செய்வீர்கள் அல்லது நல்ல வேலையில் சேர்ந்து முன்னேற்றம் அடைவதற்கு இந்த நீலக்கல் உங்களுக்கு பெரிதும் உதவும்.