நீண்ட நாள் தலைவலி உடனடியாக குறைய எளிமையான வீட்டு மருத்துவம்.!!அகத்திப்பூச் சாறு பயன்கள்.? A simple home remedy to reduce long-term headache immediately.!! Benefits of Agathi poo juice.?

நீண்ட நாள் தலைவலி உடனடியாக குறைய எளிமையான வீட்டு மருத்துவம்.!!அகத்திப்பூச் சாறு பயன்கள்.? A simple home remedy to reduce long-term headache immediately.!! Benefits of Agathi poo juice.?

தினமும் காலையில் அல்லது மாலையில் வேலைக்கு சென்று வீடு திரும்பி வந்தவுடன் எனக்கு தலைவலி வந்துவிடும் என்று சொல்லக்கூடியவர்கள், நான் அதிகமாக ஆங்கில மருத்துவத்தை பயன்படுத்துவது கிடையாது தலைவலி வரும்போது தைலம், இது போன்ற விஷயங்களை தான் நான் அதிகமாக பயன்படுத்துகிறேன் என்று சொல்லக்கூடிய ஒவ்வொருவரும் இந்த மூலிகைச்சாரை பயன்படுத்துவதன் மூலமாக 100% உங்களால் தலைவலியை குணப்படுத்த முடியும். ஆம் எளிமையான வீட்டு மருத்துவத்தைப் பற்றிதான் இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம் அகத்திப்பூ பலன்கள்.

மூலப் பொருள்:-

அகத்திப் பூக்களை பிழிந்து சாறு எடுத்து அந்த சாறு நெற்றி பொட்டில் பூசிட நீண்ட நாள் தலைவலி உடனடியாக மாறும். ஒரு சிலருக்கு ஒரு வாரம் பூசினால் திரும்ப உங்களுக்கு தலைவலி ஏற்படாது.

செய்முறை விளக்கம்:-

அகத்திப் பூக்களை எடுத்துக் கொண்டு அதை ஒரு அம்மியில் போட்டு நன்கு அரைக்க வேண்டும். அம்மி இல்லாதவர்கள் மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்த அகத்திப்பூக்களை ஒரு பருத்தி துணியில் நன்கு வடிகட்ட வேண்டும் தூய்மையான சாறு உங்களுக்கு கிடைக்கும் அந்தச் சாறு எடுத்து உங்களுடைய நெற்றி பொட்டில் பூசி வரவேண்டும். அதாவது நெற்றி பொட்டு முழுவதும் தைலத்தை தடவுவதை போல தடவினால் எவ்வளவு பெரிய தலைவலியாக இருந்தாலும் சரி, எவ்வளவு நாட்கள் நீங்கள் தலைவலியை அனுபவித்து வந்திருந்தாலும் சரி, இதை ஓரிரு நாட்கள் அல்லது ஒரு வாரம் பூசினால் உங்களுக்கு ஒரு நல்ல பலன் கிடைக்கும். தினமும் எனக்கு தலை வலி ஏற்படுகிறது என்று சொல்லக்கூடியவர்கள் இதை பயன்படுத்துங்கள் நிச்சயமாக ஒரு நல்ல மாற்றத்தை உங்களால் காண முடியும்.

குறிப்பு:-

சிறியவர் முதல் பெரியவர் வரை இதை பயன்படுத்தலாம் எந்த வித பக்க விளைவும் கிடையாது. ஒரு சிலருக்கு அலர்ஜியாகலாம் ஆனால் அது மிகவும் ரேரான விஷயம். பயப்படாமல் இதை தாராளமாக சிறியவர் முதல் பெரியவர் வருகை பயன்படுத்தலாம் ஒரு சிலருக்கு அகத்திப்பூ கிடைப்பது கிடையாது அப்படி கிடைக்காத பட்சத்தில் நீங்கள் உங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கக்கூடிய நாட்டு மருத்துவ கடைகளில் சென்று அகத்திப்பூ சாறு என்று கேட்டால் அவர்கள் கொடுப்பார்கள். அதை வாங்கி நீங்கள் உங்களுடைய நெற்றியில் பூசி வந்தால் நிச்சயமாக தலைவலி குறைய முடிந்தவரை இயற்கையான முறையில் பயன்படுத்தினால் நல்ல பலனை உங்களால் அனுபவிக்க முடியும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top