நீண்ட நாட்கள் புண் ஆறாமல் இருந்தால் என்ன காரணமாக இருக்கும் / How to know Cancer / புற்றுநோய் புண் தெரிந்துகொள்வது எப்படி :-
நீண்ட நாட்கள் ஒருவருடைய உடம்பில் அடிபட்ட புண் அல்லது தானாக முளைத்த ஏதோ ஒரு புண் ஆறாமல் வருட கணக்கில் இருக்கிறது என்றால் அது என்னவாக இருக்கும் ஒருவேளை புற்றுநோயாக இருக்குமா அல்லது டிபி கட்டியாக இருக்குமா என்ற சந்தேகம் உங்களுக்கு எல்லாம் அதைப்பற்றி தான் இந்த பதிவில் நாம் தெளிவாக பார்க்க போகின்றோம்.
ஒருவருக்கு நீண்ட நாட்களாக புண் ஆறாமல் அப்படியே இருக்கிறது என்றால் முதலில் நீங்கள் மருத்துவரை அணுகி உங்களுக்கு சர்க்கரை இருக்கிறதா என்பதை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
பிறகு அந்த புண் சாதாரண புண் தான் அல்லது புற்றுநோய் சம்பந்தப்பட்ட புண்ணா அல்லது டிபி சம்பந்தப்பட்ட புண்ணா என்பதை பற்றி அவர்கள் ஒரு தெளிவான விஷயத்தை உங்களுக்கு சொல்லும் வரை கேள்விகளை கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.
பொதுவாக நீண்ட நாட்கள் ஆறாமல் இருக்கக்கூடிய புண் கேன்சர் புண் அல்லது டிபி புண் அல்லது சாதாரண புண் தான் என்பதை பார்த்தவுடன் ஒருவரால் சொல்லிவிட முடிந்தால் கூட அதை அதிகாரப்பூர்வமாக சொல்வதற்கு பயாப்சி என்று சொல்லக்கூடிய ஒரு டெஸ்ட் இருக்கிறது அந்த டெஸ்ட் செய்து பார்ப்பதன் மூலமாக மட்டுமே இது சாதாரண கட்டி தானா அல்லது புற்றுநோய் கட்டியா அல்லது டிபி கட்டியா என்பதை உறுதி செய்ய முடியும்.
அதனால் நீண்ட நாட்களாக உங்களுக்கு ஒரு புண் ஆறாமல் இருந்தால் முதலில் நீங்கள் மருத்துவரை அணுகி அதை சரி பார்த்துக் கொள்ளுங்கள்.