நவகிரகத்தை வழிபாடு செய்யும் முறை என்ன மற்றும் நவகிரகத்தை எப்படி வழிபட வேண்டும் வாருங்கள் பார்க்கலாம்.
நவகிரக வழிபாடு என்பது மிக முக்கியமான ஒரு வழிபாடு நவகிரகங்களினுடைய தோஷங்கள் ஏதாவது நம்முடைய வாழ்க்கையில் நிகழ்ந்து கொண்டிருந்தால் நவகிரகத்தை வணங்குவதன் மூலமாக 9 நவகிரக கடவுளில் ஏதோ ஒரு கடவுளால் நமக்கு பாதிப்பு ஏற்படும் போது அந்த நவகிரகத்தை நாம் ஒன்பது முறை ஒவ்வொருவருக்கும் ஒரு முறை என்று விகிதத்தில் ஒன்பது முறை சுற்றி வரும்போது யாரால் நமக்கு பாதிப்பு இருக்கிறதோ நமக்கே தெரியாமல் அவர் நமக்கு நல்லது செய்வார் என்பது ஐதீகம்.
அப்படி நவகிரகத்தை நாம் எப்படி வழிபட வேண்டும் என்பதை இந்த பதிவில் பார்க்க போகின்றோம் நவகிரகத்தை எப்போதும் கடைசியில் தான் வழிபட வேண்டும் அது அனைவரும் அறிந்ததே வாருங்கள் எப்படி வழிபடலாம் என்று பார்க்கலாம்.
நவகிரகத்தை வழிபடும் முறை
1. கோவிலில் மூலவரை வணங்கிவிட்டு மற்றும் பிற தெய்வங்கள் அனைவரையும் வணங்கி விட்டு கடைசியில் நவகிரகத்தை வணங்க வேண்டும்
2. நவகிரகத்தை நீங்கள் சுற்றும்போது வலது புறமாக மூன்று சுத்து மற்றும் இடது புறமாக மூன்று சுத்து என்று விகிதத்தில் நீங்கள் சுற்ற வேண்டிய அவசியமில்லை 9 சுத்து வலமிருந்து இடது என்ற முறையில் நீங்கள் சுற்றினால் போதுமானது.
3. நவகிரகத்தை ஒன்பது முறை சுற்ற வேண்டும் காரணம் ஒரு கிரகத்திற்கு ஒரு சுற்று என்ற விகிதத்தில் ஒன்பது கிரகங்களுக்கு 9 சுற்று சுற்ற வேண்டும்.
4. நவகிரகத்தை எப்போதும் தொட்டு வணங்க கூடாது சற்று தொலைவில் நின்று கை கும்பிட்டு சுற்ற ஆரம்பித்து விட வேண்டும்.
5. சிவன் கோவிலில் இருக்கக்கூடிய நவகிரகம் எப்போதும் சிவனை வழிபட்ட பிறகு கடைசியாக தான் நவகிரகங்களை வழிபட வேண்டும்